நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மார்ச் 2009
2009 மார்ச் முதல் வாரம்: பேண்தகு விவசாயம்: கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குமாரசாமி தெட்ஷணாமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பேண்தகு விவசாயம், நிலவளம், நுண்ணுயிர் வளமாக்கிகள், விவசாய வனவளர்ப்பு முறை, பயிர்ச்செய்கை, மிருகவளர்ப்பு ஒருங்கிணைந்த விவசாய முயற்சிகள் போன்றன பற்றி விரிவாகப் பேசுகின்றது. வாசிக்க...
2009 மார்ச் இரண்டாம் வாரம்: British Governors of Ceylon: British Governors of Ceylon என்ற இந்நூலின் ஆசிரியர் H.A.J.Hulugalle 1918 ஆம் ஆண்டில் இருந்து 1931 வரை 17 ஆண்டுகள் Ceylon Daily News பத்திரிகையின் ஆசிரியராகக் கடைமையாற்றியவர். பிரித்தானியக் காலப்பகுதியில் 1798 இல் இருந்து 1948 வரையில் இலங்கையில் கவர்னராக இருந்தவர்களைப் பற்றிய விரிவான ஆய்வு நூலே இதுவாகும். வாசிக்க...
2009 மார்ச் மூன்றாம் வாரம்: The Legislatures of Ceylon: இலங்கையில் சட்டவாக்கம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் கூறும் விரிவான ஆய்வு நூல். இலங்கை அரசியல் யாப்புகள் எவ்வாறான வகையில் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்றும் அம்மாற்றங்களுக்கான தேவைகள் எப்படியாம அமைந்தன என்றும் அதிகாரம் மற்றும் முகாமைத்துவத்தின் மாற்றங்கள் எப்படியாக அமைந்தன என்றும் விரிவாக ஆய்கின்றது இந்நூல். வாசிக்க...
2009 மார்ச் நான்காம் வாரம்: The Revolt in the Temple: இலங்கையில் பௌத்த அடிப்படையிலான சிங்கள தேசியவாதத்தின் பைபிள் எனக் கருத்தப்படும் மகாவம்சத்துக்கு அடுத்ததாக பௌத்த சிங்களத் தேசியவாதிகளால் போற்றப்படும் நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் சிங்கள பௌத்த மக்களது 2500 வருட தொன்மத்தையும் வளர்ச்சியையும் நிலம், இனம், நம்பிக்கை சார்ந்து விரிவாக ஆய்வுசெய்கின்றது இந்நூல். வாசிக்க...