பஞ்சாங்கங்களை ( இருவகை - திருக்கணிதம், வாக்கியம்) ஆவணப்படுத்தல் என்பது ஒரு சமூகத்தின் சடங்கு மற்றும் பண்பாட்டியலின் இருப்பில் முக்கியமானதொன்றாகும்.
பஞ்சாங்கங்கள் இந்து முறையான வாழ்வியல் விடயங்களுக்கு மட்டும் உதவுபவை அல்ல. வான சாஸ்திரம், கணிதவியல் மற்றும் கிரகநிலை போன்ற விஞ்ஞானத்தன்மை சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியவையாக இவை காணப்படுகின்றன. அவற்றை அடிப்படையாக கொன்டு பஞ்சாங்கங்கள் இலங்கைத் தமிழர் பண்பாட்டு, தமிழர் வாழ்வியல் மற்றும் சமூக விடயங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை இச்செயற்றிட்டம் மூலம் பஞ்சாங்களை ஆவணப்படுத்துவதால் அறிந்துகொள்ள முடியும்.