நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஒக்டோபர் 2008
2008 ஒக்டோபர் முதல் வாரம்: ஸ்ரீ முன்னேஸ்வர வரலாறு: சிறீ முன்னேஸ்வர ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவான ஆய்வுநூல். அனைத்துமத மக்களாலும் வணங்கப்படும் சிறீ முன்னேஸ்வர ஆலயம் தொடர்பான இந்நூலை எழுதியவர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பா. சிவராமகிருஷ்ண சர்மா அவர்களாவர். வாசிக்க...
2008 ஒக்டோபர் இரண்டாம் வாரம்: ஆறுமுகநாவலர் சரித்திரம்: ஆறுமுகநாவலவர்களுடைய சரித்திரம் முன் வே. கனகரத்தினப்பிள்ளை என்பவராலும் சி. செல்லைப்பிள்ளை என்பவராலும் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் இருந்து வேறுபட்டு அவரது வாழ்வைப்பற்றி அவரது தமையனாரின் மகனாகிய த. கைலாசபிள்ளை அவர்கள் எழுதியதே இந்நூல். வாசிக்க...
2008 ஒக்டோபர் மூன்றாம் வாரம்: தென் இந்திய வரலாறு: வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் விசயநகரின் வீழ்ச்சி வரையான தென் இந்திய வரலாறு பற்றிய மிக விரிவான ஆய்வுநூல். நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை இலங்கை அரசாங்க பாஷைப் பிரிவு மொழிபெயர்த்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வாசிக்க...
2008 ஒக்டோபர் நான்காம் வாரம்: பஞ்சமர்: கே. டானியல் அவர்களால் 1982 ஆம் வெளியிடப்பட்ட பஞ்சமர் என்ற இந்நூல் சாகித்திய பரிசை வென்றது. இன்றைய தலித் இலக்கியத்திற்கான முன்னோடியாக கருதப்படும் டானியலின் இந்நாவலே சாதிய ஒடுக்குமுறையை வீரியத்துடன் எடுத்துக்கூறியது குறிப்பிடத்தக்கது. வாசிக்க...