நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஏப்ரல் 2009
2009 ஏப்ரல் முதல் வாரம்: The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka: 1977 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல் யாப்பே இப்பிரதியாகும். இலங்கை குடியரசுக்குள் உட்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய யாப்பின் முழுமையான இறுதி வடிவமே இப்பிரதியாகும்.வாசிக்க...
2009 ஏப்ரல் இரண்டாம் வாரம்: Ceylon In My Time: பிரித்தானியரான Colonel T. Y. Wright அவர்கள் இலங்கையில் இருந்த காலப்பகுதியான 1889 - 1949 வரையான இலங்கையைப் பற்றி விரிவாக எழுதிய நூலாகும். அக்காலப்பகுதியிலான இலங்கையின் பயிர்ச்செய்கை, எஸ்டேட் தொழிலாளர்கள், வரி, அரசியல், குற்றம், விளையாட்டு போனவற்றைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். வாசிக்க...
2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்: Ancient Land Tenure and Revenue in Ceylon: பிரித்தானியரான H. W. Codrington அவர்கள் பிரித்தானியக் காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியியல் சேவையில் பணிபுரிந்தவராவார். இந்நூல் இலங்கையில் நிலப்பிரிப்பு, சேவைகள், கிராமிய மட்டத்திலான சேவைகள், வரிகள், தமிழ் மாவட்டங்கள், வரலாறு போன்றவற்றை அடிப்படையாக வைத்தான ஆய்வு நூலாகும். வாசிக்க...
2009 ஏப்ரல் நான்காம் வாரம்: கிருஷிகம்: யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசினர் பரிசோதனைத் தோட்ட மனேஜர் நா. சேனாதிராசா அவர்களால் 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் நிலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான விரிவான ஆய்வு நூலாகும். இந்நூல் நிலத்தின் தன்மைகள், நிலத்திற்கும் நீருக்குமிடையிலான தொடர்பு, விவசாயமும் பயிர்ச்செய்கையும் மற்றும் பசளைகளும் நிலமும் பற்றி நமது தளத்தில் விரிவாக ஆராய்கின்றது. வாசிக்க...