நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/செப்டம்பர் 2008
2008 செப்டம்பர் முதல் வாரம்: சிவபூசை விளக்கம்: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரால்' வெளியிடப்பட்டது. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்களைக் கொண்டமைந்த இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. வாசிக்க...
2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்: ஜே. கிருஷ்ணமூர்த்தி சமகால கீழைத்தேய மெய்யியலாளர்களில் முக்கியமானவர். ஆன்மீகத் தளைகளால் பீடிக்கப்பட்ட மனங்களை விடுவிக்க உதவிய அவரது கருத்துக்கள் இந்தியாவைத் தாண்டி உலகமெல்லாம் பரவின. க.நவேந்திரன் வார ஏடொன்றில் கிருஷ்ணமூர்த்தியினது சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட இந்நூல் 1974 ஆம் ஆண்டில் வெளியானது. வாசிக்க...
2008 செப்டம்பர் மூன்றாம் வாரம்: ஈழத்து இந்துசமய வரலாறு: கி. பி. 500 ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்துசமயம் எவ்வாறு தன்னை ஈழத்தில் தகவமைத்துக் கொண்டதென விளக்கி நிற்கும் இந்நூல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. வாசிக்க...
2008 செப்டம்பர் நான்காம் வாரம்: Ceylon Gazetteer: இலங்கைத்தீவில் காணப்படும் பல்வேறுபட்ட பிரதேசங்களையும் சிறிய குறிப்புகள் மூலம் அறிமுகப்படுத்தும் இந்நூல் 1833 ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இந்நூலே இலங்கையைப் பற்றிய இடங்களை அறிமுகப்படுத்திய முதல் நூலெனக் கருதப்படுகின்றது. வாசிக்க...