நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
1621.JPG

01.05.2008: விடுதலை: அன்ரன் பாலசிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. முதலிரு கட்டுரைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால செயற்பாடுகள் பற்றியது. ஏனையவை தத்துவம், தத்துவாசிரியர்கள் தொடர்பானவை.
வாசிக்க...


1622.JPG

02.05.2008: அனைத்துலக நீதிச் சபை முன் இலங்கைத்தமிழர் பிரச்சினை: 1973 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி அனைத்துலக நீதிச்சபைக்கு தமிழர் கூட்டணி சமர்ப்பித்த அறிக்கை
வாசிக்க...



1623.JPG

03.05.2008: கங்கை நீர் வற்றவில்லை: பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் உடப்பூர் சொக்கனால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
வாசிக்க...



1624.JPG

04.05.2008: நடராஜ வடிவம்: விபுலாநந்த அடிகள் அவர்களால் எழுதப்பட்டு சென்னை சிறீராம கிருஸ்ண மடத்துத் தலைவரால் 1940 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட நூலின் மீள்பிரசுரமே இந்நூலாகும்
வாசிக்க...



1625.JPG

05.05.2008: குறிஞ்சிக் குயில்கள்: மலையகத்தை சேர்ந்த பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு. இந்நூல் அந்தனி ஜீவா அவர்களால் தொகுக்கப்பட்டது.
வாசிக்க...



1626.JPG

06.05.2008: மாரி: அமிர்தகழி, புன்னைச் சோலை சிறீ மக மாரியம்மனாலய புனராவர்த்தன புனருத்தாரண மகா கும்பாபிஷேக சிறப்பு மல.ர்
வாசிக்க...



1627.JPG

07.05.2008: The Vijayan Legend and The Aryan Myth: ... none of these whom the auther engage in debate, is or can be considered a great or famous writer of history. why, then, trouble to refute them..
வாசிக்க...



1631.JPG

08.05.2008: திருவூஞ்சல் பாடல்கள்: பகவான் சத்திய சாயி பாபாவின் பிறந்தநாள் விழாவில் நடைபெறும் 'சாய் ஜூலா' என அழைக்கப்படும் ஊஞ்சல் நிகழ்வுக்காக இயற்றப்பட்ட பாடலைக் கொண்டமைந்த நூல்.
வாசிக்க...



1632.JPG

09.05.2008: தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு: தமிழ் புத்தகங்கள் பற்றிய முழுமையான / ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தரவுத்தளமான விருபா.காம் இனது அறிமுகக் கையேடு.
வாசிக்க...



1633.JPG

10.05.2008: சூரியனின் கதை: அண்டவெளியின் கூறுகளான பால்வெளி, குறுங்கோள்கள், எரிகற்கள், சூரியன் மற்றும் சூரியனைச் சுற்றுகின்ற கோள்கள் போன்றவற்றைப் பற்றியதும் அவற்றின் இயக்கம் பற்றியதுமான அறிமுக நூல்.
வாசிக்க...



1634.JPG

11.05.2008: வாழ்வின் வெற்றி கையில்: முத்தையா வெற்றிவேல் அவர்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட நீதிநூல்.
வாசிக்க...



1635.JPG

12.05.2008: Waves, Waves and Waves: This book of poems narrates experiences we should all experience. We see people and soldiers caught in the ethnic conflict, aid agencies and the homeless facing thr tsunami, teachers and students grappling with intellectual dependency.
வாசிக்க...



114.JPG

13.05.2008: போரின் முகங்கள்: உரிமைக்கான விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற வேளையில் அதற்குச் சமாந்தரமாக விடுதலை, சமத்துவம், போரின் கொடுமைகள், வன்முறை போன்றவை ஏற்படுத்தும் உளவெளிப்பாடுகளாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு.
வாசிக்க...



259.JPG

14.05.2008: இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்: இந்துசமுத்திரப் பிராந்தியம் தொடர்பான சர்வதேச நலன்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய விரிவான பார்வையைக் கொண்ட நூல்.
வாசிக்க...



102.JPG

15.05.2008: எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே: ஹங்கேரியில் நடைபெற்ற தேசிய எழுச்சிப் போராட்டத்தின் பொது உளவியலை வெளிப்படுத்தும் கவிஞன் பெட்டோவ்ஃபியின் கவிதைகள் அடங்கிய நூல். அன்னிய ஆட்சிக்கு எதிரான உணர்வை உலகெங்கும் பரவச் செய்தவை பெட்டோவ்ஃபியின் கவிதைகள். மலையக எழுத்தாளர் கே. கணேஷால் மொழிபெயர்க்கப்பட்டது.
வாசிக்க...



1636.JPG

16.05.2008: பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்: 1960 களில் ஈழத்துத் தமிழரின் நாடக மூலமான கூத்தினது மீள் கண்டுபிடிப்பும், அதன் செம்மைப்பாடும் பேராசிரியர் சரச்சந்திராவின் நேரடித்தாக்கத்தின் விளைவுகளாகும். அவ்வகையில் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கும் நூலாகும்.
வாசிக்க...



1637.JPG

17.05.2008: கொரில்லா: பேரினவாதக் கொடூரங்கள், இயக்க வாழ்க்கை அனுபவங்கள், இயக்கங்களில் அதிருப்பிதியுற்று அல்லது பிற இயக்கங்களால் உடலும், உள்ளமும் சிதைந்து நிகழ்ந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளூடாக மேற்கொண்ட கொடும் பயணங்கள், புகலிடச் சூழலின் அகதி வாழ்வில் பிளவுண்ட மனநிலைகள்... இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே ஷோபாசக்தியின் கொரில்லா.
வாசிக்க...



1638.JPG

18.05.2008: கருத்துக் கோவை: நாற்பது வருடங்களாக படைப்பிலக்கியத்தின் மூலமும், கால் நூற்றாண்டு காலமாக மல்லிகை சஞ்சிகை மூலமும் முழுமூச்சாக கலை இலக்கியப் பணி புரிந்து கொண்டிருக்கும் டொமினிக் ஜீவா அவர்களது மணிவிழாவையொட்டிய கட்டுரைகளின் தொகுப்பு.
வாசிக்க...



No cover.png

19.05.2008: நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்: 2 ஆம் உலகப் போருக்கு முந்தைய உலகின் வரலாறு, அதனோடு இணைந்த முக்கிய சம்பவங்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றங்களையும் வரலாற்றுப் போக்கையும் வெளிப்படுத்தும் நூல்.
வாசிக்க...

1640.JPG

20.05.2008: ஈழத்துத் தமிழறிஞர்: தாமோதரம்பிள்ளை மற்றும் கணேசையர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களது இலக்கியப் பணிகளையும் விளக்கி மயிலங்கூடலூர் பி. நடராசனால் எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...



1643.JPG

21.05.2008: பாட்டும் கதையும்:இந்நூலில் உள்ள பாட்டுக்கள் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை. ஏனென்றால், இவை மிகவும் இலகுவான சொற்களால் ஆனவை. எளிமையான ஓசையமைப்புக் கொண்டவை.சுவையான கதைகளையும் சொல்வனவாய் உள்ளவை.
வாசிக்க...



1644.JPG

22.05.2008: இலக்கிய உலகம்:அனுபவ உணர்ச்சியும், அதன் கவிதா வெளிப்பாடும் கவிதைகளைத் தோற்றுவிக்கின்றன. இது பொது விதி. விதியுண்டானால் விலக்கும் உண்டென்பதற்குத் திருட்டாந்தமாக அமைகிறது இலக்கிய உலகம் என்னும் இந்நூல்.
வாசிக்க...



1645.JPG

23.05.2008: கோடுகளும் கோலங்களும்:வாழ்வின் தேடல்களில், காத்திருப்புகளில் அவ்வப்போது எழுந்த சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின்- தவிப்புகளின்- தரிசனங்களின் கோலங்களே இக்கதைகள் எனக்குறிப்பிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன்.
வாசிக்க...



1646.JPG

24.05.2008: கீரிமலையினிலே:கீரிமலை பல்வேறுவகைகளில் புகழ்பெற்றது. கீரிமலையையும், அதனோடு இணைந்த இயற்கையையும், அதன் தெய்வீகம் பொருந்திய அதன் வாழ்நிலைச் சூழலையும் முவைத்து வி. கந்தவனத்தினது கவி வெளிப்பாடே இந்நூலாகும்.
வாசிக்க...



1647.JPG

25.05.2008: கண்களுக்கு அப்பால்:இச்சிறுகதைகளில் மனித இன்னல், மனித அவலநிலை, அருந்தற்பாடு போன்றவை உள்ளீடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன. மேலும் நமது சமூகப் பார்வையின் குருட்டுத்தன்மையைக் கண்களுக்கு அப்பால் காட்டுகின்றன.
வாசிக்க...



1648.JPG

26.05.2008: வாசிகம்:வாசிப்புப் பண்பாடு மூச்சோடில்லாவிட்டால் எமது கலாச்சாரமு செத்த கலாச்சாரம் ஆகிவிடும். இன்னொரு கலாச்சாரத்தை உருவாக்க, உயிர்ப்புறச் செய்ய, வாழும் பிற கலாச்சாரம் ஊட்டம் தரும். அப்போதுதான், சிறந்த சிந்தனைகள் வலம்வரும்.
வாசிக்க...



169.JPG

27.05.2008: முன்னீடு:எஸ். பொன்னுத்துரையால் பல புத்தகங்களுக்கு முன்னீடு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது முன்னீடுகள் வாசகனை பிரதிக்குள் நுழையும் முன்பாகவே அதனைப் பற்றிய ஆழமான அறிவையும் அறிமுகத்தையும் வழங்கிவிடும். அவ்வகையில் ஒரு முன்னீடு நூலுருவில்.. .
வாசிக்க...



1652.JPG

28.05.2008: Shiva Boomi:திருமூலரின் திருமந்திரத்திலிருந்து சில கருத்துக்கள் ஆங்கிலத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
வாசிக்க...



1653.JPG

29.05.2008: அற்றுப்போன அழகு: சிறுகதை எழுத்தாளர் இயல்வாணன் தனது அம்மாவின் ஞாபகர்த்தமாக வெளியிட்ட நினைவு வெளியீடே இதுவாகும். அம்மா தொடர்பான ஞாபகப் படிமங்களைத் தனது எழுத்தினூடே அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
வாசிக்க...



1654.JPG

30.05.2008: Publications Catalogue- 2007: This catalogue providers a comprehensive list of books published by the International Center for Ethnic Studies (ICES) on subjecs related to ethnicity or ethnic problems.
வாசிக்க...



1655.JPG

31.05.2008: தரும பூஷணம் தியாகராஜா மகேஸ்வரன்: தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியன்று வணக்கத்தலம் ஒன்றில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். அவரது ஞாபகார்த்தமாக குடுபத்தினரால் வெளியிடப்பட்ட நினைவுநூல்.
வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,393] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,387] இதழ்கள் [17,544] பத்திரிகைகள் [69,846] பிரசுரங்கள் [1,391] சிறப்பு மலர்கள் [7,308] நினைவு மலர்கள் [2,625] அறிக்கைகள் [3,397]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,075] பதிப்பாளர்கள் [7,289] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,629] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க