நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஜனவரி 2009
2009 ஜனவரி முதல் வாரம்: எஸ்தாக்கியார் நாடகம்: எஸ்தாக்கியார் என்ற நாட்டுக்கூத்து உரோமபுரி கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுக்கூத்தாகும். எஸ்தாக்கியார் என்னும் இந்நூல் மாதகல் மதுரகவிப்புலவர் வ. சூசைப்பிள்ளை அவர்களால் பாடப்பெற்றது. வ. சூழைப்பிள்ளை அவர்கள் ஏற்கனவே சங்கிலியன் நாடகம், கருங்குயிற்கொன்றத்துக் கொலை நாடகம் போன்வற்றைப் பாடிப்புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிக்க...
2009 ஜனவரி இரண்டாம் வாரம்: ஞானசவுந்தரி: ஞானசவுந்தரி என்னும் இந்நூல் தென்மோடி வகையைச் சேர்ந்த நாட்டுக்கூத்தாகும். இதைப் பாடியவர் ஞா. ம. செல்வராசா அவர்களாவார். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி அரங்கேற்றப்பட்ட இந்நாட்டுக்கூத்தானது பின்னர் சில்லையூர்ச் செல்வராசன் அவர்களால் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. வாசிக்க...
2009 ஜனவரி மூன்றாம் வாரம்: தேவசகாயம்பிள்ளை: அராலியைச் சேர்ந்த சிறீ முத்துக்குமாருப்புலவர் பாடிய தேவசகாயம்பிள்ளை என்னும் நாட்டுக்கூத்து 1974 ஆம் ஆண்டு நூலுருவில் வெளிவந்தது. தேவசகாயம்பிள்ளை என்னும் இந்நாட்டுக்கூத்தானது இந்திய தேசத்து திருவாங்கூர் என்னும் இராச்சியத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இநூலில் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய சிகாமணி மாலையில் உள்ள சில பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசிக்க...
2009 ஜனவரி நான்காம் வாரம்: விசய மனோகரன்: வெ. மரியாம்பிள்ளை அவர்களால் பாடப்பெற்ற விசய மனோகரன் என்னும் நாட்டுக்கூத்தே விசய மனோகரனாகும். 1968 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற இந்நூலை பதிப்பித்தவர் மு. வி. ஆசீர்வாதம் அவர்களாவார். இந்நாட்டுக்கூத்து மேடையேறிய காலங்களில் இக்கூத்தை கலாநிதி ம. யோசேப்பு அவர்கள் மேற்பார்வை செய்திருக்கின்றார் என்பது இக்கூத்தின் விசேட அம்சமாகும். வாசிக்க...