"நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/பெப்ரவரி 2009" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(2009 Feb) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:59, 23 மார்ச் 2009 இல் கடைசித் திருத்தம்
2009 பெப்ரவரி முதல் வாரம்: கணேசையர் (நினைவுமலர்): வித்துவசிரோமணி கணேசையர் நினைவாக வெளியிடப்பட்ட இந்நூலின் முதற்பகுதியில் கணேசையரது வரலாறும் தமிழ்ப்பணியும் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் பல இலக்கியக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் அநுபந்தமாக கணேசையர்வர்களது கட்டுரைகளில் ஒன்றும் பாட்டுக்களில் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளன. வாசிக்க...
2009 பெப்ரவரி இரண்டாம் வாரம்: இலக்கணச் சுருக்கம்: இலக்கணச் சுருக்கம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். சிதம்பரம் 608001: தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24, மாலைகட்டித் தெரு, 25வது பதிப்பு, 1995. 1வது பதிப்பு, 1873. (சிதம்பரம் 608001: சபாநாயகம் அச்சகம்). iv + 238 பக்கம், விலை: இந்திய ரூபா 20. அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 1259) வாசிக்க...
2009 பெப்ரவரி மூன்றாம் வாரம்: ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்: ஈழநாட்டுப் புலவர் சரிதம் என்னும் இந்நூல் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த வித்துவான் பிரம்மசிறீ சி. கணேசையர் அவர்களால் எழுதப்பட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் 1939 ஆம் ஆண்டளவில் பதிப்பிக்கப்பட்டது. ஈழநாட்டைச் சேர்ந்த 101 புலவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய சிறுகுறிப்புக்களை உள்ளடக்கியது இந்நூலாகும். வாசிக்க...
2009 பெப்ரவரி நான்காம் வாரம்: கைலாச புராணம்: கைலாச புராணம் என்னும் இந்நூலானது சி. நாகலிங்கப்பிள்ளை அவர்களால் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்துக் கத்தியரூபமாக இயற்றி கொழும்பு பிரம்மசிறீ நா. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் விருப்பத்தின்படி விநாயக சுந்தரவிலாச யந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக நூலின் குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. வாசிக்க...