நூலகம்:தற்போதைய பணிகள்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:56, 12 அக்டோபர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
பொருளடக்கம்
செய்ய வேண்டிய பணிகள்
- நூலகம் முகப்புப் பக்கத்தை இதர தமிழ் மின்னூல் திட்டங்களது தொடுப்புக்களும் உள்ளடங்கக்கூடியவாறு மாற்றியமைக்க வேண்டும்.
- இதர மின்னூல் திட்டங்களினது தொடுப்புக்களைப் பூரணப்படுத்தல்.
- வலைப்பெட்டகத்தைப் பூரணப்படுத்துதல்.
- வலைவாசல்களை உருவாக்குதல்.
- நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களில் திருத்த வேண்டியவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும்.
- HTML வடிவில் உள்ள பனுவல்களின் Header மாற்றும் பணியைச் செய்து முடித்தல்.
- செயற்றிட்டங்களுக்கான குறிப்புக்களை இயன்றவரை விரிவாக்குதல் வேண்டும்.
- நூல்களுக்கு நூல்த்தேட்டத்தில் உள்ள விபரங்களை உள்ளீடு செய்தல்
- தன்னார்வப் பங்களிப்புக்களை இற்றைப்படுத்துதல்.
நூலகவியலாளருடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள்
- ஆவண வகைகளைச் சரிபார்த்தல்.
- சரியான குறிச்சொற்களை இடுதல்
- தூவிப் பகுப்பாக்கத்தை இணையத்தில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
இதழ்களுக்கு உள்ளடக்க விபரம் இணைத்தல்
- இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
- edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
- தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
- உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
- இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
- எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
- உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
- ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...