வலைவாசல்:இந்தியாவில் வெளிவந்த ஈழத்து ஆவணகம்/அறிமுகம்
From நூலகம்
ஆரம்பகாலங்களில் இலங்கையின் பல்வேறு பதிப்பு சார்ந்த நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். குறிப்பாக இந்தியாவில் பல்வேறு பதிப்பகங்களில் ஈழத்தழிழ் சமூகம் சார்ந்த பல்வேறு எழுத்தாளர்களது படைப்புக்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவ்வாறான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் இனங்கண்டு அவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்துவதே இச்செயல்திட்டமாக அமைகிறது.