நூலகம்:பெயரிடல் ஒழுங்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.

பொது

  • இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும்.
  • மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: உதவி:பெயர்வெளிகள்
  • பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: அன்புநெறி 2009.12 (14.5) ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: கந்தையாபிள்ளை, ந. சி.


நூல்கள், பிரசுரங்கள்

  • நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.
  • தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: இவர்கள் நம்மவர்கள் 1
  • பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.
  • முதன்மைத் தலைப்புடன் துணைத்தலைப்பும் இருந்தால் முதன்மைத் தலைப்பு: துணைத் தலைப்பு என்ற ஒழுங்கில் பெயரிடப்பட வேண்டும். எ-டு: கைலாசபதி: தளமும் வளமும்


இதழ்கள்

இதழ்களுக்குப் பெயரிடும் போது

  • ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:அன்புநெறி ) பயன்படுத்த வேண்டும்.
  • திகதி தெரியாது எனின் ஆண்டு, மாத விபரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • ஆண்டு தெரிந்து மாதம் தெரியாது எனின் ஆண்டு விபரம் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் தொடர் எண் வழங்கப்பட வேண்டும். குறித்த இதழ் ஆண்டுக்கொருமுறை வெளிவருவதாயின் அவ்வாறு அடைப்புக்குறிக்குள் எதனையும் இட வேண்டியதில்லை.
  • குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும்.
  • பருவ வெளியீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கானதாக வெளிவந்திருக்குமாயின் அதனைக் குறிக்க - குறியீடு இடைவெளிகள் இன்றிப் பயன்படுத்தப்பட வேண்டும்.

மொத்த ஆவணங்கள் : 161,531 | மொத்த பக்கங்கள் : 5,898,943

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,804] பல்லூடக ஆவணங்கள் [39,101] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,403] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,226] இதழ்கள் [17,486] பத்திரிகைகள் [69,681] பிரசுரங்கள் [1,381] சிறப்பு மலர்கள் [7,265] நினைவு மலர்கள் [2,598] அறிக்கைகள் [3,271]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,021] பதிப்பாளர்கள் [7,238] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,092] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,612] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க