நூலகம்:நூலகத் திட்டம் 2.0
இதுவரைக்கும் நாம் பல விடயங்களைப் பற்றி கலந்துரையாடி இருந்தாலும் பல முடிவுகளை ஆவணப்படுத்வோ அல்லது தகுந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவே தவறிவிட்டோம். இந்த ஆவணம் அந்தக் குறையை முன்னிறுத்தி தாயாரிக்கப்படுகிறது. இயன்றவரையில் சுருக்கமாக, தெளிவாக முடிவுகளையும், அதற்கு இணையான செயற்திட்டங்களையும், பொறுப்பாளர்களையும், கால எல்லைகளையும் இந்த ஆவணம் பதிவு செய்யும். ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்ட மேலாண்மையும், பிரச்சினாகளை எடுத்துரைத்து தீர்க்கூடிய ஒரு முறைவழியும் தேவை. அவற்றை திட்ட மேலாண்மை] நிறைவேற்றும்.
பொருளடக்கம்
இலக்கு 5000 இன் முதற்கட்டம்
நூலகத் திட்டத்தில் தற்போது ஏறத்தாழ 1200 நூற்கள் உண்டு. அதை 5000 ஆக்குவதே எமது அடுத்கட்ட இலக்கு. இதற்கு மொத்தமாக 5000 * 40 = 200 000 x 5 = 1000 000 ரூபாய்கள் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியும் அனைத்து அனுமதிகளும் இருந்தால் குறைந்தது 5 மாதங்கள் தேவையெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. (இந்த மதிப்பீடு பற்றி கருத்துக்களை பயனர்கள் பகிர்ந்து கொண்டால் நன்று.) தற்போது 200 நூற்கள் அளவிலேயே அனுமதி உண்டு. எனவே அனுமதி பெற, அது மிகவும் நிதானமான செயற்பாடு என்ற படியால் 1 1/2 வருடங்கள் எடுக்காலாம். எனவே 5000 நூற்களை எட்ட எமக்கு 2 வருடங்கள் தேவை. இது பெரிய காலமாக தெரியலாம். எப்படி இதைச் சுர்க்கலாம் என்றும் நடைமுறைப்படுத்தாம் ஆகிய விடயங்கள் தொடர்பாக பயனர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
1000 000 ரூபாய் எம்மைப் பொறுத்தவரை ஒரு பெரிய தொகை மாதிரித்தான் தெரிகிறது. இது ஏறக்குறைய 10 000 அமெரிக்க்க டொலர்கள். இதை இரண்டு வருடங்களுக்குள் திரட்ட வேண்டும். எனவே ஒவ்வொரு ஆறு மாத காலத்துக்கும் நாம் $2500 அல்லது 2500 000 திரட்ட வேண்டும்.
இதன் முதற்கட்டமாக 800 நூற்களைச் சேர்த்து எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க எண்ணியுள்ளோம். இதற்காகா $ 1000 அல்லது 100 000 திரட்ட வேண்டும்.
மேற்கண்டவை தற்போது நிலையான திட்ட வரைபு இல்லை. கருத்துக்கள் தகவல்கள் அறிந்து மேம்படுத்தப்படும்.
நிறுவனப்படுத்தல்
அனேக பயனர்கள் நூலகத் திட்டம் நிறுவனப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். பயனர் ஈழநாதன் சில பிரச்சினைகளை குறிப்பிட்டிக்கிறார்.
நிறுவன கட்டமைப்பு
சட்ட வரையறை
பயனர் வட்டம்
நூலகத்திட்டதின் பயனர்கள் தமிழ் மொழி ஆர்வலர்களே. எமது பயனர் சமூகத்தை விரிவாக்கி, பரந்த சூழலுக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு முதற்கட்ட நடவடிக்கையே நூலகம்:வலைப்பதிவு.
நிர்வாகம்
நிர்வாகிகள்
- ஒருங்கிணைப்பாளர்
- பொருளாளர்
- திட்ட பொறுப்பாளர்கள்
மதியுரை குழு
நுட்பம்
நிதி சேகரிப்பு
பதிவேற்றம்
தொடர்பாடல், பரப்புரை
சர்வதேச தொடர்பாளர்கள்
- பத்மநாப ஐயர் - இங்கிலாந்து
- சசீவன் - இலங்கை
- பு.ஈழநாதன் - சிங்கப்பூர்
- மு.மயூரன் - இலங்கை
- நற்கீரன் - கனடா
- பிரதீபா - கனடா
- விருபா - இந்தியா
- கனக சிறீதரன் - அவுஸ்திரேலியா
- க.பிரபா - அவுஸ்திரேலியா
- கி.பி.அரவிந்தன் - பிரான்ஸ்
- ப.பிரதீபன் - அமெரிக்கா கலிபோர்னியா
- தமிழ்வாலிபன்(தவா) - அமெரிக்கா வெர்ஜீனியா
- சுவாதி - அமெரிக்கா நியூயோர்க்
- சந்திரவதனா - ஜேர்மனி