வலைவாசல்:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி/அறிமுகம்
யாழ் இந்துக் கல்லூரி (Jaffna Hindu College) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு பாடசாலையாக மட்டுமன்றி தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. இது ஓர் ஆண்கள் பாடசாலை ஆகும். 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.
2013 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் கல்லூரியின் 100 க்கும் அதிகமான வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.