புதியபூமி இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இடதுசாரிப் பார்வையுடன் அரசியல் கட்சி ஒன்றின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருபதாண்டுகளுக்கு மேலாக வெளிவருகிறது.
காரை ஆதித்தியன் சுவிஸ்லாந்தில் இருந்து வெளிவரும் காலாண்டுப் பத்திரிகையாகும். காரை நகர் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது. 2002 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது.
தெளிவு இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைக்கவும் கொடுக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
சுடரொளி செப்டம்பர் 2000 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகின்றது. இது ஒரு தமிழ்த்தேசியப் பத்திரிகையாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் வார இதழாகத் தொடங்கிப் பின்னர் நாளிதழாக வெளிவருகிறது.
செஞ்சக்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் ஏடு. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகள் - தேசிய முதலாளித்துவத்தை விமர்சித்தலும் எதிர்த்தலும் - வர்க்கநிலையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளிகளை ஒன்றிணைத்தலும் செஞ்சக்தி பத்திரிகையினால் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை மக்கள் விடுதலை முன்னணி அங்கீகரிக்கின்றது.