நூலகம்:வலைவாசல்கள்
வலைவாசல்கள்
இந்நூலகத்தில் உள்ள பல்வேறு வெளியீடுகளுக்கான வழிகாட்டல் தொகுப்பிடம். இவற்றின் வழியே உங்களுக்குத் தேவையான தகவல் வளங்களை விரைவில் அடைய முடியும்.
மல்லிகை
மல்லிகை வலைவாசல்: மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது.
கிரந்தம்
வேளாண்மை
வேளாண்மை வலைவாசல்: பயிராக்கம், விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட துறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத் துறையாகக் கொள்ளப்படுகையில் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.
உயிரியல்
உயிரியல் வலைவாசல்: உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.
மறுகா
மறுகா வலைவாசல்: மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.
தமிழ் ரைம்சு
Tamil Times என்பது ஐக்கிய இராச்சியத்தில் 1981 இருந்து வெளிவந்த ஒர் ஆங்கிலச் செய்தி இதழ் ஆகும். இது இலங்கை இனப்பிரச்சினை, ஈழத் தமிழர் போராட்டம், இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளை பகுப்பாய்ந்து ஆவணப்படுத்தி உள்ளது.
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்