கிரந்த வலைவாசல்: கிரந்த எழுத்துமுறை பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். இன்றும் இலங்கையில் பெருமளவில் வழக்கில் உள்ளது.
வேளாண்மை வலைவாசல்:
பயிராக்கம், விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட துறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத் துறையாகக் கொள்ளப்படுகையில் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.
உயிரியல் வலைவாசல்:
உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.
மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.
தமிழ் ரைம்சு என்பது ஐக்கிய இராச்சியத்தில் 1981 இருந்து வெளிவந்த ஒர் ஆங்கிலச் செய்தி இதழ் ஆகும். இது இலங்கை இனப்பிரச்சினை, ஈழத் தமிழர் போராட்டம், இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளை பகுப்பாய்ந்து ஆவணப்படுத்தி உள்ளது.
சிங்களம்-தமிழ் வலைவாசல்: இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆதிகாலம் முதலே உறவாடிய மொழிகள். இருமொழி நூல்கள் பலவும் இலங்கையில் தோன்றி உள்ளன. அவ்வகையில் தமிழ் - சிங்கள அகராதிகள் மற்றும் சிங்கள-தமிழ் அகராதிகளுடன் தமிழில் சிங்கள மொழியையும், சிங்களத்தில் தமிழ் மொழியையும் கற்பதற்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன