நூலகம்:பெண்கள் ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
< நூலகம்:பெண்கள் ஆவணகம்
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 26 செப்டம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 880 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 35 | சிறப்புமலர்கள்: 34 | ஆளுமைகள்: 810 | வாய்மொழி வரலாறு : 94 |