வலைவாசல்:வில்லியம் டிக்பி சேகரம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:10, 28 பெப்ரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("இலங்கை சுதந்திரம் அடைவத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பு, அதாவது 1948-ஆம் ஆண்டுக்கு முன்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாக்கப்பட்ட சாதி, நில உரிமை மற்றும் விவசாயத் தொழிலாளர் தொடர்பான தனியார் ஆவணங்களை ஆய்வு செய்து எண்ணிமமாக்குவதே இந்த 12 மாத கால முன்னோடித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, வில்லியம் டிக்பியின் கையெழுத்துப் தொகுப்பானது, நில நிர்வாகம் மற்றும் உரிமை, தொழிலாளர் ஒப்பந்தங்கள், விவசாயப் பதிவுகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. காகிதம் மற்றும் பனையோலைகளில் எழுதப்பட்ட இந்த அரிய கையெழுத்து ஆவணங்களை எண்ணிமமாக்குவதன் மூலம், எதிர்கால ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.