கிரந்த வலைவாசல்: கிரந்த எழுத்துமுறை பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். இன்றும் இலங்கையில் பெருமளவில் வழக்கில் உள்ளது.
வேளாண்மை வலைவாசல்:
பயிராக்கம், விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட துறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத் துறையாகக் கொள்ளப்படுகையில் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.
உயிரியல் வலைவாசல்:
உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.
மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.