நூலகம்:கலந்துரையாடல்
வருக! இங்கு நூலகம் விக்கி தொடர்பான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும்.
பொருளடக்கம்
நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள்
நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் படிப்படியாக இங்கேயே தொடரும் என எதிர்பார்க்கிறேன். நிலுவையிலுள்ள பணிகள் போன்றவற்றை ஆவணப்படுத்த விக்கி மென்பொருள் மிகவும் பயன்படும். கோபி 01:50, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
noolaham.net
நூலகம் தற்போதைய வலைத்தளத்திலிருந்து கேள்விபதில், பங்களிப்பு விபரங்கள் இங்கே (விக்கி) இடப்பட்டுள்ளன. நூலகம் அறிமுகக் கட்டுரைகளுக்கான தொடுப்புக்கள் போன்றவையும் கூட நூலகம்:அறிமுகம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் விபரங்களையே தொகுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் முழுமையான பட்டியல்களுக்கான தொடுப்புக்கள் முதற்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. 01-09-2007 இலிருந்து விக்கி முதற்பக்கத்தை நூலக வலைத்தள முதற்பக்கமாக்கலாமா? அதற்குமுன் முதற்பக்கத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்? நற்கீரன், ரவி எங்கே? --கோபி 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- noolaham.net/wiki ஆனது இனது noolaham.net வலைத்தளமாக்கப்பட்டுள்ளது. --கோபி 23:13, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
விக்கிதான் நூலகத்திற்கு பொருத்தமான தேர்வு என்று தோன்றுகிறது.மாற்றங்கள் பற்றி தொடர்ந்தும் இங்கேயே உரையாடலாம் என நினைக்கிறேன் --Eelanathan 23:17, 1 செப்டெம்பர் 2007 (MDT)
புதிய வார்ப்புரு
புதிய வார்ப்புருவொன்றை அறிமுகம் செய்யும்போது ஏற்கனவேயுள்ள வார்ப்புருவை மாற்றியமைப்பது பொருத்தமல்ல. ஏனெனில் வார்ப்புருவை மாற்றினால் அது பயன்பட்ட சகல பக்கங்களிலும் மாற்றஞ் செய்ய வேண்டும். இல்லையெனில் வாசகர்களுக்கு விக்கிக் குறியீடுகள்தான் தெரியும்.
ஆதலால் புதிய வார்ப்புருக்கள் புதிய பெயரில் தொடங்கப்படுவதும் புதிய பக்கங்களில் பரீட்சிக்கப்படுவதும் பொருத்தமானது. புதிய வார்ப்புரு ஏற்றுக் கொள்ளப்பட்டால் பழைய வார்ப்புரு பயன்பட்ட பக்கங்களைப் படிப்படியாகம் மாற்றிக் கொள்ளலாம். நன்றி. கோபி 03:14, 4 செப்டெம்பர் 2007 (MDT)
- ஆமாம். இந்த முடிவுக்கு வந்தவனாகத்தான் இப்போது இருக்கிறேன். சில பரிசோதனை வார்ப்புருக்களை புதிதாகவே உருவாக்கி இருக்கிறேன். --மு.மயூரன் 03:22, 4 செப்டெம்பர் 2007 (MDT)
நூல்களை உள்ளிடுவது எப்படி?
ஈழநாதன் கவனத்திற்கு, முத்துலிங்கம் கதைகள் பேச்சுப்பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டபடியான உதவி ஆவணத்தை தயாரிப்பது மிக நல்ல யோசனையே. அதற்குமுன்னர் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, ஒரு இறுதி முடிவுக்கு வந்த பின்னால் ஆவணத்தை தயாரிக்கலாம். இவ்வாறான ஆவணமொன்றை தயாரித்து கோபிக்கும் சில நண்பர்களுக்கும் மின்னஞ்சலிட்டிருந்தேன். அதையே சற்று திருத்தியமைத்துப் பயன்படுத்தலாம். --மு.மயூரன் 03:22, 4 செப்டெம்பர் 2007 (MDT)
நூலக அமைப்பும் தத்துவமும்
மூன்று விடயங்கள்.
1. முற்போக்கு இலக்கியம் என்பது ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம் ஈழத்து இலக்கியச் சூழலில். ஆயினும் நூலகம் என்ற வகைப்பரப்பினுள் அவ்வாறு வகைப்படுத்துவது சரியல்ல. அதனூடு நற்போக்கு என்ற ஒருவகையும் இருந்தது. அதையும் வகைப்படுத்த வேண்டி வரும். அத்துடன் முற்போக்கு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எல்லோரது படைப்புக்களையும் முற்போக்கு இலக்கியம் என்று வகைப்படுத்த முடியுமா? அதேவேளை அதைச் சாராதோரின் படைப்புக்கள் அவ்வகைமாதிரியை பிரதுபலிக்குமிடத்தில் அவற்றை எப்படி வகைப்படுத்த முடியும்? அத்துடன் இவற்றை யார் வகைபடுத்த முடியும்? அத்ற்கான தெளிவான வரையளை கிடையாது என்பதே எம்முன் உள்ள பிரச்சனை. ஆகையினால் அது தவிர்க்கப்பட வேண்டியது. அத்துடன் இது பற்றிய உரையாலை தொடரும் எண்ணமும் இல்லை. பஞ்சு மூட்டைகளைக் நனைத்துச் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
2. நூல் வகைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நூலுக்குப் பல keywords கொடுக்கப்படுவதில் எனக்கு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு நூல் பல வகைகளைப் பிரதிபலிக்க கூடியதே. உதாரணமாக பிரதியின் அமைப்பு (கட்டுரை, கவிதை, நாவல், குறுநாவல்..) என்றவாறாக வரும் ஒரு பிரதி துறை சார்த்து வெவ்வேறு வகைமாதிரிக்குள் தனது இருத்தலை தகவமைக்கும். (உளவியல், சமூகவியல், போராட்டம்..) என்றவாறாக.. அதனால் அதிகளவான keywords பயன்பாடுகையை நாம் கையாள வேண்டும். ஆயினும் நாம் இரண்டு keywords ஐ இணைத்துப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அதன் பரந்த வகைமாதிரியில் இருந்து அதனைக் குறுக்கி மிகவ்ய்ம் விசேட வகை ஒன்றை அதற்கு வழங்குகின்றோம். அப்படி வழங்குவதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றின் தாய் வகையையும் நாம் ஒரு keyword பயன்படுத்தல் வேண்டும். அது மிகவும் முக்கியமானது. உதாரண்மாக போராட்ட இலக்கியம் என ஒரு வகை உருவாக்கப்பட்டுள்ளது. அது போராட்டம் மற்றும் இலக்கியம் என இரண்டு keyword பயன்படுத்தி ஒரு keyword உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது விசேட வகை keyword. இக் keyword ஐ உபயோக்கிக்கும் போது அதன் தாய் keyword களையும் உபயோகித்தல் வேண்டும். அதுவே நூலகத்தில் ஒரு பிரதியை தேடவரும் ஒருவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அவரது கவனம் மற்றும் தேடுதிறன் மட்டுப்படுத்தப்பட்ட அளவு என்னும் அளவுகோலுடனேயே எமது தரவுகளைச் செலுத்த வேண்டும். அதுவே நூலகப் பயன்பாட்டளருக்கு நல்லது. வசதியானது. அத்துடன் அதிகளவான keywords பயன்படுத்துதல் இன்னும் விசேசமானது. கவிதை என்னும் பயன்பாட்டுடன் இலக்கியம் என்ற ஒன்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். நூலக முகப்புக்கு செல்லாமல் இணையத்தொடுப்பு ஒன்றின் மூலம் ஒரு பிரதியின் பக்கத்துக்கு வந்தடையும் ஒருவர் அது சார்ந்த விடயங்களை தேடுவதற்கு ஏதுவாக keyword பயன்பாடு இருத்தல் வேண்டும். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும். கோவேறு கழுதையை பார்த்து கழுதை என்று சொல்லும் கழுதையையும் குதிரை என்று சொல்லும் குதிரையையும் அல்லது கழுதையாகவோ குதிரையாகவோ இருக்க விரும்பும் கோவேறு கழுதையையோ நாம் நீ கோவேறு கழுதையாகவே இரு என அதிகாரம் பண்ண முடியாது. கழுதைகளும் குதிரைகளும் எறும்புகளும் நாய்களும் நரிகளும் பைத்தியக்காரர்களும் கோவேறு கழுதையை பற்றி என்ன நினைக்கின்றனரோ தெரியாது. கோபியைக் கேட்டால், கோபி கழுதை, குதிரை, எறும்பு, நாய், நரி, பைத்தியக்காரனாக இருந்து யோசித்து அவை கோவேறு கழுதையாகவே நினக்கின்றன என அடித்துச் சொன்னால் நாம் என்ன செய்யமுடியும்?
3. முன்பக்கத்தில் சஞ்சிகை, சஞ்சிகைத்தொகுப்பு என இரு வகை மாதிரிகள் போடப்பட்டு இருக்கின்றன. அதிலும் என்னால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. சஞ்சிகை என போடப்பட்டு அதனுள் சஞ்சிகைக் தொகுப்பினுள் போடப்பட்ட மாதிரியான அமைப்பு விரும்பத்தக்கது. அதில் ஒரு சிக்கலும் உள்ளது ஒரு நூலை அடைவதை விட ஒரு சஞ்சிகையை அடைவதற்கு ஒரு தடவை கூட அழுத்த வேண்டி வரும். ஆயினும் அதுவே நல்லது என நினைக்கின்றேன். access என்னும் விடயத்திற்கு வரும்போது இவ்வகை மாதிரியே எல்லோராலும் சுலபமாக அடையாளப்படுத்தகூடியதான மூளை அமைப்புக்கு சமாந்தரமானது. அதை பின்பற்றுவது குழப்பங்களைத் தவிர்க்கும் என நினைக்கின்றேன். இதில் ஒரு விடயம் சொல்ல வேண்டும் இயலுமானவரை எந்த ஒரு பிரதியினதும் தனித்துவம் பேணப்படுதல் என்பதன் அதே நேரம் தனக்கு ஒத்த புள்ளியில் அது இணைந்திருப்பது என்பதும் முக்கியமானது (நூலக அமைப்பில் கூட). Documentation என்ற விடயத்திலும் அது மிகவும் துணைபுரியும். அத்துடன் இவ்வகையில் படிமுறையின் எண்ணிக்கைகள் அதிகமானாலும் கூட அது பல விடயங்களுக்கு வசதியானது. எம்மால் முடிந்த அளவு படிமுறைக்குறைப்புகளுடன் uniq என்ற இடத்துக்கு வருவதே எல்லா வகையிலும் நல்லது.
மேற்கூறிய மூன்று வகைக்குள்ளும் ஹேபமாஸ் போன்ற நவீன மார்க்சியர்கள் பின்பற்றும் Social Psycho Analysis முறையின் ஆதிக்கம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
http://www.gutenberg.org/wiki/Category:Bookshelf --மு.மயூரன் 13:38, 30 ஜனவரி 2008 (MST)
http://lorelle.wordpress.com/2005/09/09/categories-versus-tags-whats-the-difference-and-which-one/ --மு.மயூரன் 13:40, 30 ஜனவரி 2008 (MST)
பதில்
- வகைப்படுத்தல் தொடர்பான உரையாடல் என்பதால் பொதுவான கலந்துரையாடற் பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
- வலைப்பதிவுகள் போன்றதான உரையாடல்கலைத் தவிர்த்து நேரடியாகப் பேசுவது இங்கே செயற்பாடுகளை இலகுபடுத்தக்கூடும்.
- சசீவன், உங்களது நீண்ட கவித்துவமான இரன்டாவது குறிப்புக்கு மயூரன் ஓர் இணைப்பின் மூலம் பதிலளித்து விட்டார். மீடியாவிக்கி பகுப்புக்களைப் (categories) பயன்படுத்துகிறது. குறிச்சொற்களை (tags) அல்ல. தகவற்தள உருவாக்கத்துக்கே நீங்கள் குறிப்பிடுவது போன்ற கவனமெடுக்க வேண்டும்
- முற்போக்கு இலக்கியம் ஈழத்தில் மிக முக்கியத்துவமிக்க இலக்கியப் போக்கு. முற்போக்கு அணி அதிலிருந்து விலகிச் செயற்பட்ட அணி என்பது மிகவும் தெளிவானது. இங்கே உருவாக்கப்பட்ட பகுப்பு முற்போக்கு இலக்கியம் தொடர்பான நூல்களுக்கானது. குறைந்தது 5 நூல்களாவது முற்போக்கு இலக்கியம் தொடர்பில் வெளிவந்த்துள்ளன. மு.த முற்போக்காளர்களிலிருந்து விலகிச் செயற்பட்டவர். அவரது நூல் இப்பகுப்பில் இடம்பெறக் காரணம் அது முற்போக்கு இலக்கியச் செயற்பாடு தொடர்பானது என்பதாலாகும். விக்கியில் எண்ணற்ற பார்வைகளுடன் வகைகளை உருவாக்கலாம். இது அல்லது அது என்று பார்க்க வேண்டியதில்லை.
- முன்பக்கத்தில் எந்த எந்த பகுப்புக்களுக்கான இணைப்புக்கள் தர வேண்டும் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேன்டியதே. ஆனால் பகுப்புக்கள் தட்டையாக அமைய வேண்டியதில்லை. சொடுக்கல்களினூடாக (மட்டுமே) நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒற்றைப்படையான சிந்தனை. மனித மூளை பல பரிமாணங்களைக் கவனத்திலெடுக்கக்கூடியது. சிந்தனை ஓட்டத்தை இலகுபடுத்தவே படிமுறை அமைப்புப் பயன்படுகிறது. இப்பொழுது நூலகம் ஓரடுக்கில் அமைந்த பகுப்புக்களையே கொன்டுள்ளது. தேவைக்கு ஏற்ப பல பல்லடுக்குப் பகுப்புக்கள் ஏற்படுத்தலாம். ஓரடுக்குப் பகுப்புக்கள், பல்லடுக்குப் பகுப்புக்கள் ஆகிய இரண்டும் இருப்பதுவே வாசகர்களுக்கு வசதியானது.
- நூலகத்தில் உருவாக்கப்படக்கூடிய பகுப்புக்களின் சாத்தியப்பாடுகளை ஆராய - http://en.wikisource.org
கோபி 21:37, 30 ஜனவரி 2008 (MST)
வழமையை போல உனக்கு இதுவும் விளங்கவில்லை. சரி பரவாயில்லை. எனக்கு துவா வின் நினைவு வருகிறது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். அத்துடன் நூலகம் விக்கியில் எனது பங்களிப்புகள் தேவைப்படாது என உணர்கின்றேன். அதனால் நிறுத்திக் கொள்கின்றேன். மீண்டும் சந்திப்போம். -- Shaseevan
நூலக நிர்வாகச் செயர்பாடுகள்
நூலகம் விக்கியில் எனக்கிருந்த அதிகாரி தரநிலையிலிருந்து விலகிக் கொண்டுள்ளேன். மயூரன் மட்டுமே இப்பொழுது நூலகம் விக்கியின் நிர்வாகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். நான் இணைய இணைப்பின் மேலதிகாரிகள் நூலகம் வழங்கிக்கு நான் தரவேற்றுவதைத் தடுத்து விட்டனர். ஆதலால் நான் விக்கிக்கோ வழங்கிக்கோ மின்னூல்கள், படிமங்கள் போன்றவற்றைத் தரவேற்ற முடியாத நிலையில் உள்ளேன் என்பதையும் அறியத் தருகிறேன். மயூரன், நீங்கள் இரண்டு பயனர் பெயர்களில் அதிகாரி தரத்தை வைத்திருக்கிறீர்கள். இது பார்ப்பவர்களுக்கு இரு அதிகாரிகள் செயற்படுவது போல தோற்றமளிக்கும். ஆதலால் ஒரு கணக்கின் தரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நன்றி. கோபி 18:40, 31 ஜனவரி 2008 (MST)