நூலகம்:Pdfhelp
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:56, 29 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: நூலகம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள PDF வடிவக் கோப்புக்கள் குறித்த வி...)
நூலகம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள PDF வடிவக் கோப்புக்கள் குறித்த விளக்கங்க்ளை இவ்வாவணம் உங்களுக்கு வழங்கும்.
பொருளடக்கம்
PDF வடிவம் ன்றால் என்ன?
இது Portable Document Format ஆகும். அதாவது, கோப்பின் உள்ளடக்கங்களின் அமைப்புக்களிலும், வடிவங்களிலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படாமல் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய கோப்பு வடிவமாகும்.
நூலகம் ஏன் PDF கோப்புக்களை வழங்குகிறது?
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு.
- 1. மின்படியாக்கம் செய்யப்பட்ட (scanned) நூற்களை தனித்தனிப் படங்களாக வழங்கினால் அவற்றை தரவிறக்குவதும் கையாள்வதும் படிப்பதும் சிரமமாகும். படியாக்கிய நூலின் பக்கங்களை ஒரு கோப்பாக வழங்குவதற்கும், தரவிறக்கக்கூடிய அளவில் வழங்குவதற்கும் இக்கோப்பு வடிவம் பெரிதும் துணை செய்கிறது.
- 2. PDF வடிவத்தில் நூல்களை படிப்பதற்கு உங்களிடம் தமிழ் எழுத்துருக்கள் இருக்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு புத்தகத்தின் வடிவமைப்பிலும் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாது.
PDF கோப்புக்களை எனது கணினியில் எவ்வாறு படிப்பது?
இக்கோப்புக்களை திறந்து வாசிப்பதற்கு உங்கள் கணினியில் சிறப்பு மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதை வாசிப்பதற்கான மென்பொருட்கள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. இத்தகைய மென்பொருட்களைத் தரவிறக்கக்கூடிய தொடுப்புக்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.