வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 20 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("யாழ்ப்பாணப் பல்கலைக்கழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடங்களில் ஒன்றான மருத்துவ பீடத்தின் ஓர் துறையாக சமுதாய மருத்துவத் துறை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது துறைத்தலைவராக பேராசிரியர் சீ.சிவஞானசுந்தரம் அவர்கள் பணியாற்றியுள்ளார். சமுதாய மருத்துவத்துறை விரிவுரையாளர்களும், கற்கைநெறி மாணவர்களும் சமூக மற்றும் குடும்பநல மருத்துவம் சார்ந்த எண்ணற்ற வெளியீடுகளை துறையின் ஊடாக வெளியீடு செய்துள்ளனர்.
2013 இல் சமுதாய மருத்துவத்துறையினரும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏறத்தாழ 300 வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் சமுதாய மருத்துவத்துறையினரின் வெளியீடுகள் 130இற்கும் அதிமானவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.