நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 செப்டம்பர் முதல் வாரம்
2008 செப்டம்பர் முதல் வாரம்: சிவபூசை விளக்கம்: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரது' 5 ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டது. சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்கள் மாத்திரமல்லாது சிவபூசை விதியை விளக்குவதற்கு திருமுறைகள் எந்தளவு தூரம் ஆதாரமாகின்றன என்பதையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களின் ஆதாராபூர்வமான விடயங்கள் பற்றிய விளக்கங்களும் மிகவும் விளக்கமாகக் காணப்படுகின்றன. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. திரு. சேர். கந்தையா வைத்தியநாதனது வேண்டுகோளுக்கிணங்க 37 வருடங்கள் கடந்ததன் பிற்பாடு புதிய விடயங்களைச் சேர்த்தும் விளக்கியும் 'சிவபூசை விளக்கம்' என்ற இந்நூலை மீள்பதிப்பு செய்ததாகக் கூற்கின்றார் இந்நூலாசிரியர். வாசிக்க...