வலைவாசல்:கொழும்பு றோயல் கல்லூரி
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:49, 15 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கொழும்பு றோயல் கல்லூரி
கொழும்பு றோயல் கல்லூரி இலங்கையின் ஆளுனராக இருந்த சேர்.றொபேட் வில்மட் ஹோர்ட்டன் அவர்களால் இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை (Eton College) மாதிரியாகக் கொண்டு நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (Colombo Academy) என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மிகப் பழைய பொதுப் பாடசாலையாகும் (அதாவது எம்மதமும் சாராத கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது). கிறிஸ்தவ கல்லூரியின் (Christian College) ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (Rev Marsh) அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மருதானை புதுக்கடைக்கு அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருக்கும் அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
இதழ்கள்
நூல்கள்
இறுவட்டு
இணைப்புகள்
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்