நூலகம்:ஆவண வகைபிரித்தல் ஒழுங்கு
நூலக வலைத்தளத்தில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகிய ஆவணங்களை வகைபிரித்தல் தொடர்பான வழிகாட்டிப் பக்கம் இதுவாகும்.
இதழ்கள்
பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துத் பருவ வெளியீடுகளும் இதழ்கள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும். பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், ஆண்டு இதழ்கள், செய்திமடல்கள், ஆய்விதழ்கள் போன்றன அனைத்தும் பருவ வெளியீடுகள் ஆகும்.
ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். (தகவல் வளங்களும் சேவைகளும் - அ. சிறீகாந்தலட்சுமி)
சோதனை 1 : ஒரு பருவ வெளியீடு பெரும்பாலும் செய்திகளைக் கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறாயின் அது பத்திரிகைகள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும்.
சோதனை 2 : ஒரு பருவ வெளியீடு குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் நோக்கத்துடன் வெளிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதனைப் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்க வேண்டும்.
பத்திரிகைகள்
தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.