நிதிப் பங்களிப்புக்கள்
நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
- தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு
- நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி
- நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
- எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி
நூலக நிறுவனத்தின் செலவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக தனிநபர்களாலோ, குழுக்களாலோ அல்லது அமைப்புக்களாலோ பொறுப்பெடுக்கப்படுகின்றன. மேலதிக செலவுகள் சிறிதாக வழங்கப்படும் நிதிப் பங்களிப்புக்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.
2012 ஆம் ஆண்டு செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க விரும்புபவர்களோ தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
|
2011: முதன்மை நிதிப்பங்களிப்பாளர்கள்
- ஜனவரி - கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர்.
- பெப்ரவரி - தந்தையார் நினைவாக காசிநாதன்.
- மார்ச் - பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்ணியம் இணையச் சஞ்சிகை.
- ஏப்ரல் - கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள்.
- மே - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள்.
- ஜூன் - யாழ்ப்பாண நூலகம் நினைவாக தமிழச்சி தங்கபாண்டியன்.
- ஜூலை - சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள்.
- ஓகஸ்ட் - விமலேஸ்வரன், ரமணி, செல்வி, சிவரமணி நினைவாக சரிநிகர் சிவகுமார்.
- செப்டம்பர் - ராஜினி திராணகம நினைவாக அவரது உறவினர்களும் நண்பர்களும்.
- ஒக்டோபர் - நாவற்குழியூர் நடராசன் நினைவாக நாவற்குழி மகாவித்தியாலய பழைய மாணவர்கள்.
- நவம்பர் - தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள்.
- டிசம்பர் - ஏதிலிகள் அமைப்பும் நண்பர்களும்.
|