நூலகம்:கூத்து/அறிமுகம்

நூலகம் இல் இருந்து
< நூலகம்:கூத்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:52, 27 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (கட்டுரைகள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கூத்து

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் எனப்பட்டனர். கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.

பழங்காலம்

சங்ககாலத்தில் மூன்று வகையான கூத்துகள் நிகழ்ந்துள்ளளன. குரவை, தழூஉ, பிணை என்பன அவை. தெய்வ ஆடல்கள் பதினொன்றும் கூத்தின் வகைகளே. கூத்தினை உணர்த்தும் சொற்கள் பல.



கூத்தின் வகைகள்

அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து என்றழைப்பர்.

புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து என்றழைப்பர்.


தெருக்கூத்து

.

பொருள் அடிப்படையில்

புழுதி கூத்து


கூத்து கலாசாரம் இன்றைய கால கட்டத்தில் பின் தள்ளப்பட்டே வருகின்றது.ஆனாலும் சில கூத்துக்கள் இன்றும் நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது.

அந்த நிலையில் தெருக்கூத்து பிரபலமான ஒன்றாகும்.


தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

வலைத்தமிழ்.காம் இல் தெருக்கூத்து பற்றி கட்டுரை வந்துள்ளது.


கூத்து நடைபெறும் இடம்

தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற விசுப்பலகை (bench)போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.


ஆடை அணிகலண்கள்

கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டிய முழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண் வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களை அணிவர்.


விதிமுறைகள்
  • கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இதனைக் களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது என ஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.
  • கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர்.
  • தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வேடமிட்டு நடிப்பர்.
  • பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கி முடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோன்பிருப்பர்.


இசைக்கருவிகள்

தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னணி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.


கூத்துகள் பற்றி கட்டுரைகள்,நூல்கள்,ஆளுமைகள்,அமைப்புக்கள் வெளிவந்து இருக்கின்றது. அதை பற்றி நோக்குவோம்-

கட்டுரைகள்

நூல்கள்

ஆளுமைகள்

அமைப்புக்கள்

  • கலாசார அமைப்புக்கள்
  • சமய பொது அமைப்புக்கள்

வெளி இணைப்புக்கள்

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,391] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,133] இதழ்கள் [17,442] பத்திரிகைகள் [69,513] பிரசுரங்கள் [1,365] சிறப்பு மலர்கள் [7,241] நினைவு மலர்கள் [2,582] அறிக்கைகள் [3,218]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,977] பதிப்பாளர்கள் [7,189] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,013] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,594] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க