நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:38, 20 ஏப்ரல் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
நிதிப் பங்களிப்புக்கள்
நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
- ஆண்டுதோறும் குறைந்தது 400,000 பக்கங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்தல்.
- நூலகச் சேகரங்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தல்.
- எண்ணிமப்படுத்தலுக்கான கணினி, மின்வருடி, உபகரணச் செலவுகள்.
- வழங்கிகள், காப்புப்படிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்
- வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்தல்
- பல்லூடக ஆவணங்களை ஆவணகம் (www.aavanaham.org) வலைத்தளத்தில் சேகரித்தல்
- ஆவணப்படுத்தப்பட்ட வெளியீடுகளை எண்ணிம நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பதிவுசெய்து வகைப்படுத்தி உள்ளடக்கம் போன்ற மேலதிக தகவல்களையும் இணைத்தல், பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்
தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்
நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
- தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் அப்பங்களிப்பாளரை 'தொடர்ச்சியான பங்களிப்பாளாராக்' காட்சிப்படுத்துவதனூடாக கௌரவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
- நூலகச் செயற்பாடுகளை பிரதேச ரீதியாகவும் நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும்.
- நூலக நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட நூல்வெளியீடுகளையும் , மீள்பதிப்புக்களையும் செய்யவுள்ளது. அதற்கான நிதியுதவிகளையும் தனியாக வழங்க முடியும்.