வலைவாசல்:சுவடியகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 8 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("இலங்கையின் தமிழ் பேசும் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.