நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 செப்டம்பர் முதல் வாரம்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 1 செப்டம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
2008 செப்டம்பர் முதல் வாரம்: சிவபூசை விளக்கம்: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரால்' வெளியிடப்பட்டது. சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்கள் மாத்திரமல்லாது சிவபூசை விதியை விளக்குவதற்கு திருமுறைகள் எந்தளவு தூரம் ஆதாரமாகின்றன என்பதையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களின் ஆதாராபூர்வமான விடயங்கள் பற்றிய விளக்கங்களும் மிகவும் விரிவாகக் காணப்படுகின்றன. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. வாசிக்க...