வலைவாசல்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:08, 12 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பிலிருந்து செயற்படும் ஒரு பெண்கள் தொடர்பான அமைப்பு ஆகும். இது 1982 இல் பெண்ணிய ஆய்வாளர்கள், செயற்பாட்டாலர்கள் அடங்கிய குழுவொன்றினால் இலங்கையில் பெண்களின் நிலை தொடர்பாக ஆராயவும் அது தொடர்பான வெளியீடுகளைச் செய்யவும் உருவாக்கப்பட்டது. பெண்கள் விழிப்புணர்வு, அவர்கள் சமூக, பொருளாதார அரசியற் செயற்பாடுகளில் பங்கெடுப்பதற்கான வளங்களையும் வாய்ப்புக்களையும் அதிகரித்தல் ஆகிய நோக்கங்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
2007 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏறத்தாழ 140 வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள் 100க்கும் அதிமானவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.
நூல்கள்: 36 | இதழ்கள்: 4 |