வலைவாசல்:வாசிகசாலை/அனுசரணையாளர்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 2 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
நடு இணைய சிற்றிதழ் 2016 ஆண்டு கோமகனை பிரதம ஆசிரியராகக்கொண்டு நண்பர்கள் ஒருசிலருடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் எழுதுவதில் ஆர்வமுள்ள ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் புகைப்பட /ஓவியக்கலைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுத்தல், மொழிபெயர்ப்பு ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வருதல், குறிப்பாக சட்டகங்களுக்குள் சிக்காது எழுத்துறையில் இருப்பவர்களைப் பேசச்செய்தல் போன்றவையாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் பல சிறப்பிதழ்களையும் ஈழத்து எழுத்தாளர்களது பிறந்தநாள் நினைவுக் குறிப்பிதழ்களையும், கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள் என்ற தொடரையும் செய்து இருக்கின்றது. இப்பொழுது நூலகத்தின் வாசிகசாலை திட்டத்திற்கு அனுசரணையாளராக செயற்படுகின்றது.