"நூலகம்:முஸ்லிம் ஆவணகம்/அனுசரணையாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("left|200px|thumb 2013ம் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:51, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
2013ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இயங்கி வரும் "அல்பயான் அரபு நிறுவனம்" அரபு மொழி, அல்-குர்ஆன் , இஸ்லாமிய பாடங்கள், வாலிபர்களுக்கான பயிற்சிகள், பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், கல்வி சார் வழி காட்டல்கள், புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள், இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் நலன்கள் என பல பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புலம் பெயர்ந்து வாழும் , இலங்கை முஸ்லீம் சமூகத்தின் அமைப்புகளை ஆவணப் படுத்தும் பணியில் " வாரம் ஒரு வரலாறு" எனும் நிகழ்ச்சியை வாரம் தோறும் முக நூல் நேரலையில் செய்து வருவதோடு அதனை யூ டியூபிலும் பதிவேற்றி வருகிறது. மேலும் 2020 ஆம் ஆண்டிலிருந்து புத்தக வெளியீடு, நூல் அறிமுகம், நூல் ஆவணப்படுத்தல் ஆகிய விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.