"வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Parathan பக்கம் வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் என்பதை [[வலைவாசல்:ஈவ்லின் இ...) |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[பகுப்பு:வலைவாசல்கள்]] | [[பகுப்பு:வலைவாசல்கள்]] | ||
[[பகுப்பு:செயற்றிட்ட வலைவாசல்கள்]] | [[பகுப்பு:செயற்றிட்ட வலைவாசல்கள்]] | ||
+ | [[பகுப்பு:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்]] |
05:55, 14 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இது கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் அவரது மனைவி அமரர் ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அவர்களின் நினைவாக 10.05.1981 அன்று நிறுவப்பட்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் 1981 மே 31இல் எரியுண்டதை அடுத்து கொழும்பிலிருந்த கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களின் அரிய ஆவணச் சேகரிப்புகளையும், அவரது நட்பு வட்டத்திலிருந்து சேகரித்த வரலாற்று, சமூகவியல், தொல்லியல்துறைசார் நூல்களையும் விலை கொடுத்து வாங்கப்பட்ட செனரத் பரனவிதானவின் சேகரத்தினையும், காலனித்துவ அதிகாரிகளான வில்லியம் டிக்பி, அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் போன்றோரின் தனிப்பட்ட ஆவணங்களையும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது துணைவியாரின் நினைவு மண்டபத்துக்குக் கொண்டு வந்து அங்கு ஒரு ஆராய்ச்சி நூலகத்தை பேராசிரியர் கா.இந்திரபாலா அவர்களின் துணையுடன் உருவாக்கினார். பின்னாளில் பேராசிரியர் இந்திரபாலாவின் சேகரிப்புகளும் அத்துடன் சேர்க்கப்பட்டு சிறந்ததொரு ஆய்வு நிறுவனமாக பல்கலைக்கழக வட்டாரத்தில் அது இயங்கிவந்தது. திரு ஆ.சிவநேசச்செல்வன் அவர்கள் 1983 வரையிலும் நூலகராகப் பொறுப்பேற்றிருந்தார். 1983இல் வீரகேசரி நிறுவனத்தின் பிரதம ஆசிரியராக அவர் சென்ற பின்னர் என்.செல்வராஜா அவர்கள் நூலகராக 1991வரை பணியாற்றிவந்தார்.இந்நிறுவனத்தை கலாநிதி இரத்தினம் 1986இல் யாழ்ப்பாணக் கல்லூரியிடம் நிர்வகிப்பதற்கு வழங்கியிருந்தார். இது தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலையமாக இருக்கிறது. நூலகர் என்.செல்வராஜா அவர்களின் பின்னர் இந்நிறுவனத்திற்கு நூலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. தற்போது நூலக நிறுவன ஈவ்வின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு சேகரம் ஒன்றினை உருவாக்கி அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் லிற்றில் எய்ட் இன் அனுசரணையுடனும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.
நூல்கள்: 588 | இதழ்கள்: 1,595 | பத்திரிகைகள்: 205 | பிரசுரங்கள்: 41 | சிறப்புமலர்கள்: 126 | நினைவுமலர்: 15 | பல்லூடக ஆவணகம்: 27 |
உள்ளடக்க வகை
ஈவ்லின் இரத்தினம் நூலகத்தில் இருந்து நூலகத்திற்கு எண்ணிமப்படுத்த கொண்டு வரப்பட்ட ஆவணங்களின் வகைகள்:-
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்