"நூலகம்:Site support" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
சி |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
<div style="padding: .4em .9em .9em"> | <div style="padding: .4em .9em .9em"> | ||
− | * [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்|நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம்]] | + | * [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்|'''நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம்''']] |
+ | |||
+ | |||
'''3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன''' | '''3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன''' |
02:21, 22 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன 2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா 800,000 என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நிதிதிரட்டும் பணி நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒவ்வொருகட்ட முடிவிலும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும்.
வாரம் ஒரு நூலை ஆவணபடுத்தும் இச்செயற்றிட்டம் கடந்த ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்படுவது. அரிய நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டமாகும். இச்செயற்றிட்டத்திற்காக அனைத்துத் துறைகளில் இருந்தும் நூல்கள் தெரிவுசெய்யப்படுகின்றன. இச்செயற்றிட்டத்திற்கான நூல் தெரிவில் இருந்து பதிவேற்றம் செய்வது வரையான அனைத்து விடயங்களுக்கும் இச்செயற்றிட்டத்தை முன்னெடுப்பவரே பொறுப்பு. அத்துடன், இச்செயற்றிட்ட ஆவணப்படுத்தலுக்கான கணனி மற்றும் கணனி உபகரணங்கள், மின்சாரம் போன்ற விடயங்கள் முகப்புச் செயற்றிடத்தை முன்னெடுப்பவரால் ஒழுங்குபடுத்தப்படுவது.
கொழும்பு தமிழ்ச்சங்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டமானது கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணமாக்கல் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது. கணனி மற்றும் கணனி உபகரணங்கள் சசீவனால் வழங்கப்பட்டது. மின்சாரத்திற்கான செலவுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டியது. கணனி உபகரணங்கள் பழுதடையும் பட்சத்தில் நூலகம் திட்டம் சார்பாகவே அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும். முழுநேரமாக மின்வருடவதற்கான ஊழியர் ஒருவர் மூலம் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டமானது முழுநேரமாக மின்வருடம் ஒரு ஊழியரை வைத்து முன்னெடுக்கப்பட உள்ளது. இச்செயற்றிட்டத்திற்கான கணனி மற்றும் கணனி உபகரணங்கள் ஆகியவற்றை நூலகம் திட்டம் சார்பாகவே அளிக்க வேண்டியுள்ளது. இடம மற்றும் கணனி வசதி போன்றவை இத்திட்டத்தை ஒருங்கிணைப்பவரால் ஒழுங்கெசெய்யப்படும். ஊழியருக்கான நிதியை நூலகம் திட்டம் சார்பாக வழங்க வேண்டும்.
நூலகம் திட்டம் கடந்த 4 வருடங்களாக தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அது திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர் மூலம் அழைக்கப்பட்டது. நூலகம் பிரமாண்டமான கட்டத்தை அடைந்த நிலையிலும் தன்னை விரிவாக்கியவாறு வளர வேண்டிய நிலையிலும் இனிவரும் காலத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக நிதிக்கொடுப்பனவு மூலம் ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. இப்பணிக்கான ஊழியம், இப்பணிக்குத் தேவையான கணனி, இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் போன்றவற்றை நூலகம் திட்டமே ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அது மட்டுமன்றி செய்திமடல் வெளியிட வேண்டிய தேவையும் உள்ளது. அதற்குத் தேவையான நிதிப்பயன்பாடும் இப்பகுதியில் இருந்தே செலவுசெய்யப்பட வேண்டியுள்ளது. நூலகத்தின் பரவலாக்கலுக்குத் தேவையான செயற்பாடுகள் இப்பகுதியில் உள்ள நிதிவளத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள்,
|
நூலகம் திட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு மின்னூல்களே ஆகும்.
மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். பெறப்படும் நிதி மின்னூலாக்கத்துக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறியத்தரப்படுகிறது.
நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி.