"நூலகம்:Mp3help" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | == | + | == mp3 கோப்பு என்றால் என்ன? == |
இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3) | இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3) |
08:43, 26 சூன் 2008 இல் கடைசித் திருத்தம்
பொருளடக்கம்
mp3 கோப்பு என்றால் என்ன?
இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3)
நூலகம் mp3 கோப்புக்களை ஏன் வழங்குகிறது?
நூலகத்தின் ஒலி நூற்களை வாசகர்கள் கேட்கத்தக்கவாறு வழங்குவதற்கு ஒலிக்கோப்பு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. இதன்காரணமாக ஒலிநூற்கள் mp3 வடிவத்திலும் வழங்கப்படுகின்றன.
mp3 கோப்பொன்றினை நான் எப்படிக் கேட்பது?
பெரும்பாலும் உங்கள் ஒலியிசைப்புச் சாதனங்களிலும் கணினியிலும் இயல்பிருப்பு மென்பொருட்களைக்கொண்டே இக்கோப்பு வடிவத்தை கேட்கக் கூடியதாக இருக்கும்.
அவ்வாறு கேட்க முடியாதிருப்பின் இத்தொடுப்பில் கிடைக்கும் VLC ஒலிச்செயலியை நிறுவிக்கொண்டு அதன் துணையுடன் mp3 வடிவ ஒலிநூற்களைக் கேட்கலாம்.
ogg வடிவத்திலும் ஒலி நூற்கள் வழங்கப்படும்போது ஏன் மேலதிகமாக mp3 வடிவத்திலும் வழங்கப்படுகிறது?
திறந்த மூலக் குறிமுறையாக்கம் என்ற அளவில் ogg இல் ஒலிக்கோப்புக்கள் பரிமாறப்படுவதையே நூலகம் பெரிதும் விரும்புகிறது என்ற போதிலும் ஒலிச்சாதனங்கள் பரவலாக ogg க்கான ஆதரவினை வழங்கத்தவறுவதால் mp3 வடிவத்தையும் ஒரு தெரிவாகக் கொள்ளவேண்டியதாகிறது.
ஒலிநூற்கள் எனும்போது கணினி தவிர்ந்த ஏனைய ஒலியிசைப்புச் சாதனங்களிலும் வாசகர்கள் அவற்றை கேட்க விரும்பக்கூடும் என்பதால் அவர்களின் வசதி கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
mp3 வடிவம் தொடர்பான சட்டச் சர்ச்சைகள் பல காணப்படுவதாலும் அதற்குச்சமமான மாற்றீடாகத் திறந்த மூலத்தெரிவொன்று இருப்பதாலும் ஒலிக்கோப்புக்களைப்பரிமாற ogg வடிவத்தையே பயன்படுத்துவது விரும்பத்தக்கது