"வலைவாசல்:தொல் தமிழர் வழிபாடு சார் விடயங்களை ஆவணப்படுத்தல்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 3: | வரிசை 3: | ||
அந்த வகையில் நூலக நிறுவனம் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்க முனைகின்றது. | அந்த வகையில் நூலக நிறுவனம் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்க முனைகின்றது. | ||
இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாடுகளில் வழிபடப்படும் தெய்வங்களும் அத் தெங்வங்களுக்களுக்கான வழிபாடுகளும் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வழிபாடுகளில் பெரும்பான்மையானவை சடங்கு முறையில் அமைந்தவையாகும். இச்சடங்குககள் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. அத்துடன் இச்சடங்குகள் இலங்கையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சமூக பொருளதார பண்பாட்டு அமசங்களை புலப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன. மேலும் வழிபாட்டுடன் பிணைந்திருக்கின்ற நம்பிக்கைகள், தொன்மங்கள்,சமூக வரலாறுகள், கோயிலமைப்பு - சோடணை - ஆடை - பாடல் - இசை - ஆட்ட மரபுகள் போன்றனவும் கவனத்திற் கொள்ளத்தக்கனவாகவும் விளங்குகின்றன. இத் தனித்துவமான பண்பாட்டம்சங்களை இச்செயற்றிட்டத்தின் மூலம் நூலகம் ஆவணப்படுத்த முனைகின்றது. | இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாடுகளில் வழிபடப்படும் தெய்வங்களும் அத் தெங்வங்களுக்களுக்கான வழிபாடுகளும் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வழிபாடுகளில் பெரும்பான்மையானவை சடங்கு முறையில் அமைந்தவையாகும். இச்சடங்குககள் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. அத்துடன் இச்சடங்குகள் இலங்கையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சமூக பொருளதார பண்பாட்டு அமசங்களை புலப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன. மேலும் வழிபாட்டுடன் பிணைந்திருக்கின்ற நம்பிக்கைகள், தொன்மங்கள்,சமூக வரலாறுகள், கோயிலமைப்பு - சோடணை - ஆடை - பாடல் - இசை - ஆட்ட மரபுகள் போன்றனவும் கவனத்திற் கொள்ளத்தக்கனவாகவும் விளங்குகின்றன. இத் தனித்துவமான பண்பாட்டம்சங்களை இச்செயற்றிட்டத்தின் மூலம் நூலகம் ஆவணப்படுத்த முனைகின்றது. | ||
− | தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் பல்வேறு பண்பாடுகளின் | + | தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் பல்வேறு பண்பாடுகளின் சமூக மாற்றங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு மாற்றமடைந்தும் அருகியும் வரும் ஒரு காலகட்டத்தில் இச் செயற்றிட்டத்தினை நூலக நிறுவனம் ஆவணப்படுத்த முனைந்திருக்கின்றது. இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளில் பொதுமைகள் அதன் வரலாற்று மெய்யிற் கட்டமைப்பின் போக்கில் ஆராய்தல் என்பது இன்றியமையாதது. அதனடிப்படையில் இச்செயற்றிட்டம் பின்வரும் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்த முனைகின்றது. |
ஆசிவக வழிபாட்டு மரபு | ஆசிவக வழிபாட்டு மரபு |
05:33, 30 சூன் 2025 இல் நிலவும் திருத்தம்
இலங்கையில் வாழ்ந்த பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை பேணியவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு மரபுகள் நிலம் அல்லது திணை சார்ந்தவையாகவும் தொழில் மற்றும் சமூக வாழ்வியல் சார்ந்தவையாகவும் அமைந்திருந்தன. இவ்வகையான வழிபாட்டு மரபுகளை தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் எனக் குறிப்பிடலாம். இவ் வழிபாட்டு முறைகளில் சில இன்றும் தொடரப்பட்டு வருகின்றன. சில வழக்கருகிவிட்டன. இன்றும் தொடர்கின்ற தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளில் சமஸ்கிருத வழிபாட்டு முறைகள் புகுத்தப்பட்டும் உள்ளன. சில சமஸ்கிருத மயமாக்கத்திற்கு உள்ளாகி மாற்றமடைந்தும் விட்டன. அவ்வகையில் இலங்கையில் வழக்கில் உள்ள தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளை தொடர்ச்சியானதாகவும் தொடர்ச்சி திரிந்தனவாகவும் கொண்டு பார்க்க வேண்டியதாகின்றது. அந்த வகையில் நூலக நிறுவனம் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்க முனைகின்றது. இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாடுகளில் வழிபடப்படும் தெய்வங்களும் அத் தெங்வங்களுக்களுக்கான வழிபாடுகளும் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வழிபாடுகளில் பெரும்பான்மையானவை சடங்கு முறையில் அமைந்தவையாகும். இச்சடங்குககள் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. அத்துடன் இச்சடங்குகள் இலங்கையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சமூக பொருளதார பண்பாட்டு அமசங்களை புலப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன. மேலும் வழிபாட்டுடன் பிணைந்திருக்கின்ற நம்பிக்கைகள், தொன்மங்கள்,சமூக வரலாறுகள், கோயிலமைப்பு - சோடணை - ஆடை - பாடல் - இசை - ஆட்ட மரபுகள் போன்றனவும் கவனத்திற் கொள்ளத்தக்கனவாகவும் விளங்குகின்றன. இத் தனித்துவமான பண்பாட்டம்சங்களை இச்செயற்றிட்டத்தின் மூலம் நூலகம் ஆவணப்படுத்த முனைகின்றது. தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் பல்வேறு பண்பாடுகளின் சமூக மாற்றங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு மாற்றமடைந்தும் அருகியும் வரும் ஒரு காலகட்டத்தில் இச் செயற்றிட்டத்தினை நூலக நிறுவனம் ஆவணப்படுத்த முனைந்திருக்கின்றது. இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளில் பொதுமைகள் அதன் வரலாற்று மெய்யிற் கட்டமைப்பின் போக்கில் ஆராய்தல் என்பது இன்றியமையாதது. அதனடிப்படையில் இச்செயற்றிட்டம் பின்வரும் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்த முனைகின்றது.
ஆசிவக வழிபாட்டு மரபு
குமாரர் வழிபாட்டு மரபு
முருகன் - கந்தசுவாழி வழிபாட்டு மரபு
பழங்குடிகளின் வழிபாட்டு மரபு
பெரிய சாமி அல்லது கப்பல் வழிபாட்டு மரபு
நீலாசோதையன் வழிபாட்டு மரபு
கண்ணகி வழிபாட்டு மரபு
திரௌபதி அம்மன் வழிபாட்டு மரபு
கடல் நாச்சியம்மன் வழிபாட்டு மரபு
நாச்சிமார் வழிபாட்டு மரபு
காளியம்மன் வழிபாட்டு மரபு
பேச்சி அம்மன் வழிபாட்டு மரபு
மாரியம்மன் பழங்குடிகளின் வழிபாட்டு மரபு
நாகம்பிரான் வழிபாட்டு மரபு
எழுமங்கயைர் வழிபாட்டு மரபு