வலைவாசல்:தமிழிலக்கணம்
தமிழிலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் தொன்மையானது.இயற்கையானது. கணிதம் போன்று, பல வரையறைகளை உடையது. இன்றளவும், உயிர்ப்புடன் இருப்பதும் ஆகும்.எனவே, பல அயல்மொழி அறிஞர்களால், போற்றப்படுவதும் ஆகும்.
இலக்கு + அணம் என்பவை இணைந்து, இலக்கணம் உருவானது என்பர். இங்கு இலக்கு என்பது காரணம், வரைதல்,எழுதுதல் என்பனவற்றைக் குறிக்கிறது. அணம் என்றால், முறை என்பது பொருளாகும். தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, தமிழிலக்கணம் ஆகும்.
தமிழ் விளக்கத்துடன் தமிழிலக்கணம்
தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும்.
1. தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள முல்லை நிலையம், 1993 ஆம் ஆண்டு இப்பதிப்பை வெளியிட்டது.
2. ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலைப் பிரசுரம், 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பை பேராசிரியர் அரங்க. முருகையனும், இலண்டன் மனநல மருத்துவர் க.இந்திரகுமாரும் தொகுத்துள்ளனர்.
ஆங்கில விளக்கத்துடன் தமிழிலக்கணம்
தமிழிலக்கணத்தை, ஆங்கில மொழி வாயிலாகவும் கற்கலாம். அதில் குறிப்பிடத்தக்கன வருமாறு:-
1. Tamil Self - Taught, 2001 (முதற்பதிப்பு 1911)
2.Hand Book of Tamil Grammar, 1930
3.Hand Book of the Tamil Language, 1933.
நூற்பட்டியல்
- தொல்காப்பியத் தேன் துளிகள்
- இனிக்கும் இலக்கணம்: எழுத்ததிகாரம்
- வினைப் பகுபத விளக்கம்
- இலக்கண ஒப்புமை(தமிழ்+யப்பான்)
- அடிப்படைத் தமிழ் இலக்கணம்
- இலக்கண வினாவிடை
- இங்கு,மேலும் பல்வகை நூல்களைக் காணலாம்.
...
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்