வலைவாசல்:மன்னார் ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
மன்னார் பிராந்திய ஆவணகத்தில் மன்னார் மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், விவசாயம் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், பன்மைத்துவம், சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள், பெண்கள் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், அந்த மாவட்டத்திலே இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், அபிவிருத்தி முயற்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள் போன்றன பற்றியும் பண்டைய வரலாற்றினையும், அந்தப் பிரதேசத்தின் அரசியற் தனித்தன்மைகளையும், மன்னார் இலங்கையின் வேறு இராசதானிகளுடன் கொண்டிருந்த உறவுகளையும் ஆவணப்படுத்துவதே இச்செயற்றிட்டமாகும்.