வலைவாசல்:தொல் தமிழர் வழிபாடு சார் விடயங்களை ஆவணப்படுத்தல்/அறிமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இலங்கையில் வாழ்ந்த பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை பேணியவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு மரபுகள் நிலம் அல்லது திணை சார்ந்தவையாகவும் தொழில் மற்றும் சமூக வாழ்வியல் சார்ந்தவையாகவும் அமைந்திருந்தன. இவ்வகையான வழிபாட்டு மரபுகளை தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் எனக் குறிப்பிடலாம். இவ் வழிபாட்டு முறைகளில் சில இன்றும் தொடரப்பட்டு வருகின்றன. சில வழக்கருகிவிட்டன. இன்றும் தொடர்கின்ற தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளில் சமஸ்கிருத வழிபாட்டு முறைகள் புகுத்தப்பட்டும் உள்ளன. சில சமஸ்கிருத மயமாக்கத்திற்கு உள்ளாகி மாற்றமடைந்தும் விட்டன. அவ்வகையில் இலங்கையில் வழக்கில் உள்ள தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளை தொடர்ச்சியானதாகவும் தொடர்ச்சி திரிந்தனவாகவும் கொண்டு பார்க்க வேண்டியதாகின்றது. அந்த வகையில் நூலக நிறுவனம் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்க முனைகின்றது. இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாடுகளில் வழிபடப்படும் தெய்வங்களும் அத் தெங்வங்களுக்களுக்கான வழிபாடுகளும் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வழிபாடுகளில் பெரும்பான்மையானவை சடங்கு முறையில் அமைந்தவையாகும். இச்சடங்குககள் தனித்துவமானதொரு பண்பாட்டு மரபை புலப்படுத்தி நிற்கின்றன. அத்துடன் இச்சடங்குகள் இலங்கையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சமூக பொருளதார பண்பாட்டு அமசங்களை புலப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன. மேலும் வழிபாட்டுடன் பிணைந்திருக்கின்ற நம்பிக்கைகள், தொன்மங்கள்,சமூக வரலாறுகள், கோயிலமைப்பு - சோடணை - ஆடை - பாடல் - இசை - ஆட்ட மரபுகள் போன்றனவும் கவனத்திற் கொள்ளத்தக்கனவாகவும் விளங்குகின்றன. இத் தனித்துவமான பண்பாட்டம்சங்களை இச்செயற்றிட்டத்தின் மூலம் நூலகம் ஆவணப்படுத்த முனைகின்றது. தொல்தமிழ் வழிபாட்டு மரபுகள் பல்வேறு பண்பாடுகளின் சமூக மாற்றங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு மாற்றமடைந்தும் அருகியும் வரும் ஒரு காலகட்டத்தில் இச் செயற்றிட்டத்தினை நூலக நிறுவனம் ஆவணப்படுத்த முனைந்திருக்கின்றது. இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தொல்தமிழ் வழிபாட்டு மரபுகளில் பொதுமைகள் அதன் வரலாற்று மெய்யிற் கட்டமைப்பின் போக்கில் ஆராய்தல் என்பது இன்றியமையாதது. அதனடிப்படையில் இச்செயற்றிட்டம் பின்வரும் தமிழ் வழிபாட்டு மரபுகளை ஆவணப்படுத்த முனைகின்றது.

மொத்த ஆவணங்கள் : 180,013 | மொத்த பக்கங்கள் : 6,408,685

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,31,081] பல்லூடக ஆவணங்கள் [48,347] ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [752]

தகவல் மூலங்கள் : நூல்கள் [22,130] இதழ்கள் [18,156] பத்திரிகைகள் [73,080] பிரசுரங்கள் [1,524] சிறப்பு மலர்கள் [7,579] நினைவு மலர்கள் [3,002] அறிக்கைகள் [5,715]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,715] பதிப்பாளர்கள் [7,826] வெளியீட்டு ஆண்டு [239]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [123] நிறுவனங்கள் [1,968] ஆளுமைகள் [3,440] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,565] | மலையக ஆவணகம் [1,507] | பெண்கள் ஆவணகம் [2,071]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூட நூலகம் [23,276] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [5,769] | அனர்த்தகால உயர்தரப் பரீட்சை கல்வி வளங்கள் [5]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1845] | திருகோணமலை ஆவணகம் [2113] | அம்பாறை ஆவணகம் [1256]

தொடரும் செயற்திட்டங்கள் : யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3,954] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [752] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [350] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [283] |தமிழ்நாட்டில் அச்சிடப்பட்ட எழுத்தாவணங்கள் [122] |தில்லைநாதன் முத்துசாமிப்பிள்ளை சேகரம் [164] | தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் [142] | இலங்கையின் உள்நாட்டுக் குற்ற வழக்குகள் [48] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,985] |உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] இலங்கை முஸ்லிம்களின் துண்டுப்பிரசுர ஆவணகம் [2297] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013 ] | வில்லியம் டிக்பி சேகரம் [191] |