நூலகம்:கலந்துரையாடல்/1

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
Mrs Damothiran.JPG
Cartoon 1.JPG

நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள்

நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் படிப்படியாக இங்கேயே தொடரும் என எதிர்பார்க்கிறேன். நிலுவையிலுள்ள பணிகள் போன்றவற்றை ஆவணப்படுத்த விக்கி மென்பொருள் மிகவும் பயன்படும். கோபி 01:50, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

noolaham.net

நூலகம் தற்போதைய வலைத்தளத்திலிருந்து கேள்விபதில், பங்களிப்பு விபரங்கள் இங்கே (விக்கி) இடப்பட்டுள்ளன. நூலகம் அறிமுகக் கட்டுரைகளுக்கான தொடுப்புக்கள் போன்றவையும் கூட நூலகம்:அறிமுகம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் விபரங்களையே தொகுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் முழுமையான பட்டியல்களுக்கான தொடுப்புக்கள் முதற்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. 01-09-2007 இலிருந்து விக்கி முதற்பக்கத்தை நூலக வலைத்தள முதற்பக்கமாக்கலாமா? அதற்குமுன் முதற்பக்கத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்? நற்கீரன், ரவி எங்கே? --கோபி 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

noolaham.net/wiki ஆனது இனது noolaham.net வலைத்தளமாக்கப்பட்டுள்ளது. --கோபி 23:13, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

விக்கிதான் நூலகத்திற்கு பொருத்தமான தேர்வு என்று தோன்றுகிறது.மாற்றங்கள் பற்றி தொடர்ந்தும் இங்கேயே உரையாடலாம் என நினைக்கிறேன் --Eelanathan 23:17, 1 செப்டெம்பர் 2007 (MDT)

புதிய வார்ப்புரு

புதிய வார்ப்புருவொன்றை அறிமுகம் செய்யும்போது ஏற்கனவேயுள்ள வார்ப்புருவை மாற்றியமைப்பது பொருத்தமல்ல. ஏனெனில் வார்ப்புருவை மாற்றினால் அது பயன்பட்ட சகல பக்கங்களிலும் மாற்றஞ் செய்ய வேண்டும். இல்லையெனில் வாசகர்களுக்கு விக்கிக் குறியீடுகள்தான் தெரியும்.

ஆதலால் புதிய வார்ப்புருக்கள் புதிய பெயரில் தொடங்கப்படுவதும் புதிய பக்கங்களில் பரீட்சிக்கப்படுவதும் பொருத்தமானது. புதிய வார்ப்புரு ஏற்றுக் கொள்ளப்பட்டால் பழைய வார்ப்புரு பயன்பட்ட பக்கங்களைப் படிப்படியாகம் மாற்றிக் கொள்ளலாம். நன்றி. கோபி 03:14, 4 செப்டெம்பர் 2007 (MDT)

ஆமாம். இந்த முடிவுக்கு வந்தவனாகத்தான் இப்போது இருக்கிறேன். சில பரிசோதனை வார்ப்புருக்களை புதிதாகவே உருவாக்கி இருக்கிறேன். --மு.மயூரன் 03:22, 4 செப்டெம்பர் 2007 (MDT)


நூல்களை உள்ளிடுவது எப்படி?

ஈழநாதன் கவனத்திற்கு, முத்துலிங்கம் கதைகள் பேச்சுப்பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டபடியான உதவி ஆவணத்தை தயாரிப்பது மிக நல்ல யோசனையே. அதற்குமுன்னர் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, ஒரு இறுதி முடிவுக்கு வந்த பின்னால் ஆவணத்தை தயாரிக்கலாம். இவ்வாறான ஆவணமொன்றை தயாரித்து கோபிக்கும் சில நண்பர்களுக்கும் மின்னஞ்சலிட்டிருந்தேன். அதையே சற்று திருத்தியமைத்துப் பயன்படுத்தலாம். --மு.மயூரன் 03:22, 4 செப்டெம்பர் 2007 (MDT)


நூலக அமைப்பும் தத்துவமும்

மூன்று விடயங்கள்.

1. முற்போக்கு இலக்கியம் என்பது ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம் ஈழத்து இலக்கியச் சூழலில். ஆயினும் நூலகம் என்ற வகைப்பரப்பினுள் அவ்வாறு வகைப்படுத்துவது சரியல்ல. அதனூடு நற்போக்கு என்ற ஒருவகையும் இருந்தது. அதையும் வகைப்படுத்த வேண்டி வரும். அத்துடன் முற்போக்கு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எல்லோரது படைப்புக்களையும் முற்போக்கு இலக்கியம் என்று வகைப்படுத்த முடியுமா? அதேவேளை அதைச் சாராதோரின் படைப்புக்கள் அவ்வகைமாதிரியை பிரதுபலிக்குமிடத்தில் அவற்றை எப்படி வகைப்படுத்த முடியும்? அத்துடன் இவற்றை யார் வகைபடுத்த முடியும்? அத்ற்கான தெளிவான வரையளை கிடையாது என்பதே எம்முன் உள்ள பிரச்சனை. ஆகையினால் அது தவிர்க்கப்பட வேண்டியது. அத்துடன் இது பற்றிய உரையாலை தொடரும் எண்ணமும் இல்லை. பஞ்சு மூட்டைகளைக் நனைத்துச் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2. நூல் வகைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நூலுக்குப் பல keywords கொடுக்கப்படுவதில் எனக்கு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு நூல் பல வகைகளைப் பிரதிபலிக்க கூடியதே. உதாரணமாக பிரதியின் அமைப்பு (கட்டுரை, கவிதை, நாவல், குறுநாவல்..) என்றவாறாக வரும் ஒரு பிரதி துறை சார்த்து வெவ்வேறு வகைமாதிரிக்குள் தனது இருத்தலை தகவமைக்கும். (உளவியல், சமூகவியல், போராட்டம்..) என்றவாறாக.. அதனால் அதிகளவான keywords பயன்பாடுகையை நாம் கையாள வேண்டும். ஆயினும் நாம் இரண்டு keywords ஐ இணைத்துப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அதன் பரந்த வகைமாதிரியில் இருந்து அதனைக் குறுக்கி மிகவ்ய்ம் விசேட வகை ஒன்றை அதற்கு வழங்குகின்றோம். அப்படி வழங்குவதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றின் தாய் வகையையும் நாம் ஒரு keyword பயன்படுத்தல் வேண்டும். அது மிகவும் முக்கியமானது. உதாரண்மாக போராட்ட இலக்கியம் என ஒரு வகை உருவாக்கப்பட்டுள்ளது. அது போராட்டம் மற்றும் இலக்கியம் என இரண்டு keyword பயன்படுத்தி ஒரு keyword உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது விசேட வகை keyword. இக் keyword ஐ உபயோக்கிக்கும் போது அதன் தாய் keyword களையும் உபயோகித்தல் வேண்டும். அதுவே நூலகத்தில் ஒரு பிரதியை தேடவரும் ஒருவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அவரது கவனம் மற்றும் தேடுதிறன் மட்டுப்படுத்தப்பட்ட அளவு என்னும் அளவுகோலுடனேயே எமது தரவுகளைச் செலுத்த வேண்டும். அதுவே நூலகப் பயன்பாட்டளருக்கு நல்லது. வசதியானது. அத்துடன் அதிகளவான keywords பயன்படுத்துதல் இன்னும் விசேசமானது. கவிதை என்னும் பயன்பாட்டுடன் இலக்கியம் என்ற ஒன்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். நூலக முகப்புக்கு செல்லாமல் இணையத்தொடுப்பு ஒன்றின் மூலம் ஒரு பிரதியின் பக்கத்துக்கு வந்தடையும் ஒருவர் அது சார்ந்த விடயங்களை தேடுவதற்கு ஏதுவாக keyword பயன்பாடு இருத்தல் வேண்டும். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும். கோவேறு கழுதையை பார்த்து கழுதை என்று சொல்லும் கழுதையையும் குதிரை என்று சொல்லும் குதிரையையும் அல்லது கழுதையாகவோ குதிரையாகவோ இருக்க விரும்பும் கோவேறு கழுதையையோ நாம் நீ கோவேறு கழுதையாகவே இரு என அதிகாரம் பண்ண முடியாது. கழுதைகளும் குதிரைகளும் எறும்புகளும் நாய்களும் நரிகளும் பைத்தியக்காரர்களும் கோவேறு கழுதையை பற்றி என்ன நினைக்கின்றனரோ தெரியாது. கோபியைக் கேட்டால், கோபி கழுதை, குதிரை, எறும்பு, நாய், நரி, பைத்தியக்காரனாக இருந்து யோசித்து அவை கோவேறு கழுதையாகவே நினக்கின்றன என அடித்துச் சொன்னால் நாம் என்ன செய்யமுடியும்?

3. முன்பக்கத்தில் சஞ்சிகை, சஞ்சிகைத்தொகுப்பு என இரு வகை மாதிரிகள் போடப்பட்டு இருக்கின்றன. அதிலும் என்னால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. சஞ்சிகை என போடப்பட்டு அதனுள் சஞ்சிகைக் தொகுப்பினுள் போடப்பட்ட மாதிரியான அமைப்பு விரும்பத்தக்கது. அதில் ஒரு சிக்கலும் உள்ளது ஒரு நூலை அடைவதை விட ஒரு சஞ்சிகையை அடைவதற்கு ஒரு தடவை கூட அழுத்த வேண்டி வரும். ஆயினும் அதுவே நல்லது என நினைக்கின்றேன். access என்னும் விடயத்திற்கு வரும்போது இவ்வகை மாதிரியே எல்லோராலும் சுலபமாக அடையாளப்படுத்தகூடியதான மூளை அமைப்புக்கு சமாந்தரமானது. அதை பின்பற்றுவது குழப்பங்களைத் தவிர்க்கும் என நினைக்கின்றேன். இதில் ஒரு விடயம் சொல்ல வேண்டும் இயலுமானவரை எந்த ஒரு பிரதியினதும் தனித்துவம் பேணப்படுதல் என்பதன் அதே நேரம் தனக்கு ஒத்த புள்ளியில் அது இணைந்திருப்பது என்பதும் முக்கியமானது (நூலக அமைப்பில் கூட). Documentation என்ற விடயத்திலும் அது மிகவும் துணைபுரியும். அத்துடன் இவ்வகையில் படிமுறையின் எண்ணிக்கைகள் அதிகமானாலும் கூட அது பல விடயங்களுக்கு வசதியானது. எம்மால் முடிந்த அளவு படிமுறைக்குறைப்புகளுடன் uniq என்ற இடத்துக்கு வருவதே எல்லா வகையிலும் நல்லது.

மேற்கூறிய மூன்று வகைக்குள்ளும் ஹேபமாஸ் போன்ற நவீன மார்க்சியர்கள் பின்பற்றும் Social Psycho Analysis முறையின் ஆதிக்கம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.

Shaseevan

http://www.gutenberg.org/wiki/Category:Bookshelf --மு.மயூரன் 13:38, 30 ஜனவரி 2008 (MST)

http://lorelle.wordpress.com/2005/09/09/categories-versus-tags-whats-the-difference-and-which-one/ --மு.மயூரன் 13:40, 30 ஜனவரி 2008 (MST)

பதில்

 • வகைப்படுத்தல் தொடர்பான உரையாடல் என்பதால் பொதுவான கலந்துரையாடற் பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
 • வலைப்பதிவுகள் போன்றதான உரையாடல்கலைத் தவிர்த்து நேரடியாகப் பேசுவது இங்கே செயற்பாடுகளை இலகுபடுத்தக்கூடும்.
 • சசீவன், உங்களது நீண்ட கவித்துவமான இரன்டாவது குறிப்புக்கு மயூரன் ஓர் இணைப்பின் மூலம் பதிலளித்து விட்டார். மீடியாவிக்கி பகுப்புக்களைப் (categories) பயன்படுத்துகிறது. குறிச்சொற்களை (tags) அல்ல. தகவற்தள உருவாக்கத்துக்கே நீங்கள் குறிப்பிடுவது போன்ற கவனமெடுக்க வேண்டும்
 • முற்போக்கு இலக்கியம் ஈழத்தில் மிக முக்கியத்துவமிக்க இலக்கியப் போக்கு. முற்போக்கு அணி அதிலிருந்து விலகிச் செயற்பட்ட அணி என்பது மிகவும் தெளிவானது. இங்கே உருவாக்கப்பட்ட பகுப்பு முற்போக்கு இலக்கியம் தொடர்பான நூல்களுக்கானது. குறைந்தது 5 நூல்களாவது முற்போக்கு இலக்கியம் தொடர்பில் வெளிவந்த்துள்ளன. மு.த முற்போக்காளர்களிலிருந்து விலகிச் செயற்பட்டவர். அவரது நூல் இப்பகுப்பில் இடம்பெறக் காரணம் அது முற்போக்கு இலக்கியச் செயற்பாடு தொடர்பானது என்பதாலாகும். விக்கியில் எண்ணற்ற பார்வைகளுடன் வகைகளை உருவாக்கலாம். இது அல்லது அது என்று பார்க்க வேண்டியதில்லை.
 • முன்பக்கத்தில் எந்த எந்த பகுப்புக்களுக்கான இணைப்புக்கள் தர வேண்டும் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேன்டியதே. ஆனால் பகுப்புக்கள் தட்டையாக அமைய வேண்டியதில்லை. சொடுக்கல்களினூடாக (மட்டுமே) நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒற்றைப்படையான சிந்தனை. மனித மூளை பல பரிமாணங்களைக் கவனத்திலெடுக்கக்கூடியது. சிந்தனை ஓட்டத்தை இலகுபடுத்தவே படிமுறை அமைப்புப் பயன்படுகிறது. இப்பொழுது நூலகம் ஓரடுக்கில் அமைந்த பகுப்புக்களையே கொன்டுள்ளது. தேவைக்கு ஏற்ப பல பல்லடுக்குப் பகுப்புக்கள் ஏற்படுத்தலாம். ஓரடுக்குப் பகுப்புக்கள், பல்லடுக்குப் பகுப்புக்கள் ஆகிய இரண்டும் இருப்பதுவே வாசகர்களுக்கு வசதியானது.
 • நூலகத்தில் உருவாக்கப்படக்கூடிய பகுப்புக்களின் சாத்தியப்பாடுகளை ஆராய - http://en.wikisource.org

கோபி 21:37, 30 ஜனவரி 2008 (MST)

வழமையை போல உனக்கு இதுவும் விளங்கவில்லை. சரி பரவாயில்லை. எனக்கு துவா வின் நினைவு வருகிறது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். அத்துடன் நூலகம் விக்கியில் எனது பங்களிப்புகள் தேவைப்படாது என உணர்கின்றேன். அதனால் நிறுத்திக் கொள்கின்றேன். மீண்டும் சந்திப்போம். -- Shaseevan

நூலக நிர்வாகச் செயற்பாடுகள்

 1. நூலகம் விக்கியில் எனக்கிருந்த அதிகாரி தரநிலையிலிருந்து விலகிக் கொண்டுள்ளேன். மயூரன் மட்டுமே இப்பொழுது நூலகம் விக்கியின் நிர்வாகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம்.
 2. நான் பயன்படுத்தும் இணைய இணைப்பின் மேலதிகாரிகள் நூலகம் வழங்கிக்கு நான் தரவேற்றுவதைத் தடுத்து விட்டனர். ஆதலால் நான் விக்கிக்கோ வழங்கிக்கோ மின்னூல்கள், படிமங்கள் போன்றவற்றைத் தரவேற்ற முடியாத நிலையில் உள்ளேன் என்பதையும் அறியத் தருகிறேன்.
 3. மயூரன், நீங்கள் இரண்டு பயனர் பெயர்களில் அதிகாரி தரத்தை வைத்திருக்கிறீர்கள். இது பார்ப்பவர்களுக்கு இரு அதிகாரிகள் செயற்படுவது போல தோற்றமளிக்கும். ஆதலால் ஒரு கணக்கின் தரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நன்றி.

கோபி 18:40, 31 ஜனவரி 2008 (MST)

கோபி, தற்போது உங்களுக்கு இணையப்பயன்பாட்டில் தடைகள் இருந்தாலும், பிறகொருமுறை இணையம் கிடைக்கும்போது அதிகாரி அனுமதியைப் பயன்படுத்த முடியுமே. விலகுவது பயனற்றதல்லவா? ஒருவர் அதிகாரியாக இருப்பது விரும்பத்தக்கதல்ல.
சசீவன், கோபி, தற்போது கோபிக்கு தரவேற்றம் தடுக்கப்பட்டிருப்பதால் சஞ்சிகைகளுக்கான முகப்புப்படங்களைத் தரவேற்றும் வேலையை இன்னொருவர் பொறுப்பெடுக்க வேண்டியுள்ளது. சசீவனிடம் எல்லாபடங்களும் இருக்கும் என நம்புகிறேன். தரவேற்ற வேலையில் அவர் களைத்துப்போயிருந்தால் அப்படங்களை நானே தரவேற்றி விடுகிறேன். படம் என்ன அளவில் போடப்பட வேண்டும் என்பதை அறியத்தாருங்கள். --மு.மயூரன் 00:30, 1 பெப்ரவரி 2008 (MST)

நான் பக்க நீக்கலை மேற்கொண்டபோது எச்சரிக்கைப் பக்கம் ஒன்று தோன்றியது. (கல்வியல்லாத நடவடிக்கைக்குப் பயன்படுத்துவதாக) ஆதலால் நிர்வாக வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளேன். சசீவன் அதிகாரி தரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே என் தரத்தைக் குறைத்துக் கொண்டேன். :) கோபி 17:51, 1 பெப்ரவரி 2008 (MST)

பகுப்பு:பிரசுரங்கள்

நூல்களாகக் கருதப்படமுடியாத வெளியீடுகளுக்காகப் பிரசுரங்கள் என்ற பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சஞ்சிகை அல்லாத வெளியீடுகளில் செல்வராஜாவின் நூல் தேட்டம் தொகுப்புக்களில் நூல்களாகச் சேர்க்கப்படாத வெளியீடுகளை இப்பகுப்பினுள் இணைத்தல் பொருத்தமாக இருக்குமா? கோபி 01:26, 15 பெப்ரவரி 2008 (MST)

பெயரிடல்

இதழ்களுக்குப் பெயரிடும் போது ஒரே தொடரிலக்கம் இருப்பின் அதனைப் பயன்படுத்திப் பெயரிடப்படுகிறது. அவ்வாறு தொடரிலக்கம் இல்லையெனில் அடைப்புக் குறிகளுள் (மாதம் ஆண்டு) என்ற ஒழுங்கிலும் பெயரிடப்படுகிறது. குறித்த இதழில் தமிழ் மாதங்கள் பயன்படுத்தப்பட்டால் அவ்வாறும் ஆங்கில மாதமெனின் அவ்வாறும் பயன்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாத கால இதழ்களுக்கு முதல் மாதம் மட்டும் பெயரிடலில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக 2000 ஏப்ரல்-மே இதழை (ஏப்ரல் 2000) எனப் பெயரிட வேண்டும். ஒரே மாதிரியான பெயரிடல் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ளதா என்பது தெரிந்து விடும். மேலும் விசேட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் கட்டுரை இல்லாத இதழ்கள் மீண்டும் வருவதையும் தவிர்க்கலாம். கோபி 06:17, 17 ஏப்ரில் 2008 (MDT)

அவசரமாக முடிக்க வேண்டியவை

கோபி, 4 மாதங்களுக்கு முன்னர் தாங்கள் கூறியபடிக்கு சில வேலைகள் இன்னும் மீதமிருக்கிறது. அவற்றை உடனடியாகச் செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

1. தட்டெழுதப்பட்ட நூல்களின் மேல் உள்ள தலைபகுதியின் திருத்தம். இலக்கங்கள் பலவிதமாக மாறுபாடான விதத்தில் உள்ளன.

2.திருத்த வேண்டியவைப் பகுதியை 406 வரைக்கும் முழுமையக்கித்தருவதாக உறுதியளித்தீர்கள். ஆயினும் அது சில மாதங்களாக நகராமல் அப்பிடியே இருக்கிறது. அதை 406 வரைக்கும் முழுமைப்படுத்தி அனுப்பினால், நான் அவற்றைச் சரிபார்க்க ஏதுவாக இருக்கும்.

ஏனெனில் 406 வரையான பிரதிகள் பல தவறுகளைக் கொண்டுள்ளன. அவற்றை திரும்பவும் சரிபார்க்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

ஆக, நூலகம்:திருத்த வேண்டியவை என்பதை 406 வரைக்கும் பூர்த்திசூது தந்தால், நான் அவற்றை உடனடியாகச் செய்து முடித்துவிடுகின்றேன். Shaseevan

தட்டெழுதப்பட்ட நூல்களை மீளமைக்கும் பணி நிறைவு பெறவில்லை. 406 வரைக்கும் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விபரங்கள் குறித்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. நன்றி. கோபி 03:50, 25 ஏப்ரில் 2008 (MDT)

முழுமையாகச் செய்து முடித்துவிட்டுச் சொல்லவும். நான் அதை விரைவாகச் செய்து முடிக்கிறேன். உங்களது முழுமைக்காகக் காத்திருக்கிறேன். நன்றி. Shaseevan

தகவல்கள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. கோபி 04:05, 25 ஏப்ரில் 2008 (MDT)

கோபி, திருத்தவேண்டிய விடயங்களில் நீங்கள் குறிப்பிட்ட மாதிரிச் செய்வதற்கு நூலகத்திடம் வளம் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுக் கூறும் பட்சத்தில் நான் அவற்றைச் செய்து முடித்து விடுகிறேன். நீங்கள் தற்போது குறிப்பிட்ட மாதிரிச் செய்வதற்கு நூலகத்தில் வளங்கள் இல்லை. ஆகையால் மாற்றுவழியை நாடவும். Shaseevan

சீராக்கப்படக்கூடிய என்பதிலிருந்து சீராக்கப்பட வேண்டிய என்பதாக அந்தப் பட்டியல்ளைச் சுருக்க முடியும். சில தினங்களில் அதனைச் சுருக்கித் தர முடியும். நன்றி. கோபி 04:16, 25 ஏப்ரில் 2008 (MDT)

htm மாற்றங்களின் விபரம்

தட்டெழுதப்பட்ட நூல்கள் பழைய வடிவமைப்பிலிருந்து மாற்றப்பட்டு மூன்று row கொண்ட table ஐக் கொண்ட htm ஆக மாற்றப்படுகின்றன. முதல் row வில் பொதுவான விபரங்களும் இரண்டாவது row வில் தட்டெழுதிய பகுதியும் வருகிறது. மெய்ப்புப் பார்க்கும் போது ஒரேயடியாக பிரதியீடு செய்ய இது வசதியாக இருக்கும். அத்துடன் மூலங்கள் wordpad இலிருந்து notepad க்கு நகர்த்தப்படுகின்றன. மாற்றப்பட்ட notepad களும் பதிவேற்றப்படுகின்றன. அத்துடன் மெய்ப்புப் பார்க்காத நிலையில் இருப்பதால் htm களுக்கு formatting செய்யப்படவில்லை.

இந்த மாற்றங்கள் இதுவரை முதல் 55 மின்னூல்களுக்கே செய்யப்பட்டுள்ளன. கோபி 04:16, 25 ஏப்ரில் 2008 (MDT)

கோபி, 55 என்று தவறுதலாகச் சொல்லிவிட்டீர்களோ தெரியவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை சரி பார்க்கவும். 4 மாதங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 5 விடயங்களைச் செய்யும் படி நான் கேட்ட போது நீங்கள் "இல்லை 3 தான் செய்வேன்" என்று அடம்பிடித்ததாக ஞாபகம். ஆக, தற்போது 480 வரை செய்து முடித்திருப்பீர்கள் என நினைத்தேன். நீங்கள் சொன்ன இலக்கத்தை ஒருமுறை சரிபார்க்கவும். Shaseevan

சசீவன்,//அடம்பிடித்ததாக// - மடலாடற்குழு போன்றதாக நூலக வலைத்தள உரையாடல்களும் நகராவண்ணம் உரையாடுவது இங்கு பங்களிப்போருக்கும், பங்களிக்கப் போவோருக்கும் உவப்பானதாயிருக்கும் என நம்புகிறேன். நான் செய்து முடித்த விபரங்களையே தெரியப்படுத்தியிருந்தேன். நன்றி. கோபி 19:33, 25 ஏப்ரில் 2008 (MDT)

கோபி, 406 இற்கு பிறகான விடயங்கள் திருத்தப்பட்டாயிற்று. சரி பார்க்கவும். 406 இற்கு முதலுள்ள விடயங்களில் உள்ள தவறுகளைச் சரியாகக் குறிப்பிட்டால் அதனை இலகுவாகச் செய்ய முடியும். Shaseevan

திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டன. நன்றி. கோபி 19:33, 25 ஏப்ரில் 2008 (MDT)

புதிய பெயர்வெளி

சேகரம் என்ற புதிய பெயர்வெளி இத்தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நூல்கம் பெயர்வெளியில் இருந்த சேகரங்கள் பக்கங்கள் அனைத்தும் இப்புதியபெயர்வெளிக்கு நகர்த்தப்பட்டுவிட்டன.

இனி சேகரம் தொடர்பான பக்கங்களை இந்த பெயர்வெளியில் உருவாக்க வேண்டுகிறேன்

நன்றி வினோத் 03:15, 13 ஜூலை 2008 (MDT)

சில பரிந்துரைகள்

 • கிழே இருக்கும் Discussion, Edit, History, Move, Wach ஆகியவையை மேலையும் அல்லது said bar போட்டா நல்ல இருக்கும். கொஞ்சம் பரிச்சியம் வந்தா சரியாடிது.
 • இந்தப் பக்கத்தை இன்றைப்படுத்தவா?
 • இந்தப் பக்கத்தை கொஞ்சம் முதன்மைப் படுத்தனா நன்றாக இருக்கும்.

--Natkeeran 21:02, 20 ஜூலை 2008 (MDT)

நற்கீரன், நூலகம்:அறிமுகம் பக்கத்தில் நூலகம் தொடர்பான எல்லாத் தொடுப்புக்களும் உள்ளன. நூலகத் திட்டம் தொடர்பாக அப்பக்கத்தை இற்றைப்படுத்தி முதன்மைப்படுத்துவது இலகுவாயிருக்கும். நூலக வலைத்தளத்தில் பங்களிக்கும் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பரிச்சயமற்றோரே. அத்துடன் அவர்கள் அனைவரும் கலந்துரையாடற் பக்கத்துக்கு வருவார்களென எதிர்பார்க்க முடியாது. தகவல்களைத் தெரியப்படுத்த அவர்களது மின்னஞ்சல்முகவரிகள் வரை செல்வது வினைத்திறனாயிருக்கும். ஆனாலும் வலைத்தளம் தொடர்பான உரையாடல்களுடன், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் இந்தப்பக்கம் பயன்பட வேண்டும். கோபி 00:02, 21 ஜூலை 2008 (MDT)

வேலை செய்யா இணைப்புக்கள் பட்டியல்

இணைய சேவகனில் தாங்கள் கொடுத்துள்ள கோப்புறையில்் எந்த கோப்பும் இல்லை. ஆகவே, தான் இணைப்பு வேலை செய்யவில்லை.
குறிபபிட்ட கோப்பை மறுபதிவேற்றம் செய்ய வேண்டும் வினோத் 09:38, 21 ஜூலை 2008 (MDT)

இதழாசிரியர் பகுப்புக்கள்

இதழ்களை இதழாசிரியர் வாயிலாகவும் பகுப்பாக்கம் செய்யும்போது அவர்களது நூல்களின் விபரங்கள் கவனிக்கப்படாதுபோக வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டுக்கு மல்லிகைகள் டொமினிக் ஜீவா என்ற பகுப்புக்குள் வந்தால் அவர் எழுதிய நூல்கள் இலகுவில் தென்படாது. ஆதலால் இதழ்களை இதழாசிரியர் பகுப்புக்களினுள் இடுவதை தவிர்க்கலாம் என்றே படுகிறது. நன்றி. கோபி 01:13, 8 ஆகஸ்ட் 2008 (MDT)

கோபி அதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. டொமினிக் ஜீவா என்ற இணைப்பைச் சொடுக்கும் போது மல்லிகை இதழ்கள் வராவிட்டால் எமது தரவுத் தளம் ஒழுங்காகக் கட்டமைக்கப்படவில்லை என்ற முடிவுக்கே நான் வருவேன். டொமினிக் ஜீவா என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது மல்லிகை. மல்லிகை இதழ்களின் பக்கத்தில் டொமினிக் ஜீவா என்ற பகுப்பு வருவதே சரி என்று நான் நினைக்கின்றேன்.

மல்லிகை என்ற பகுப்பை டொமினிக் ஜீவா என்ற பகுப்பினுள்ளும் வருமாறு அமைக்கலாம். அல்லது டொமினிக் ஜீவா பகுப்பிலிருந்து இணைப்புத் தரலாம். தனித்தனியாக இதழ்கள் அனைத்தையும் இணைப்பதைத் தவிர்க்கவே கோரினேன். வார்ப்புருவில் பகுப்புக்கு இணைப்புக் கொடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. கீழே பகுப்புக்களை கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றே தோன்றுகின்றது. நன்றி கோபி 04:00, 9 ஆகஸ்ட் 2008 (MDT)

பிரதீபன் அண்ணா, டொமினிக் ஜீவா என்ற பகுப்பினுள் மல்லிகை பகுப்பை வருமாறு பார்த்துக் கொள்ளலாம். டொமினிக் ஜீவா என்னும் பக்கத்திற்குச் செல்லும் ஒருவர் மல்லிகை பகுப்பைச் சொடுக்குவதன் மூலம் அனைத்து மல்ல்லிகைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு இதழ்களுக்குமான பக்கத்திலேயே டொமினிக் ஜீவா என்பது வந்தவாறாகா இருக்குமானால் வருபவரிற்கு குழப்பமே எஞ்சும். ஆகவே, இதழ்கள் பக்கத்தில் தொடுப்பு கொடுக்காமல் விடுவது நல்லது எனவே நினைக்கிறேன். Shaseevan 21:46, 9 ஆகஸ்ட் 2008 (MDT)

நூலகம்:19

மேற்படி பட்டியலில் உள்ள நூல்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாகவா அல்லது தேவை கருதியா என்றும் தெரியவில்லை. அத்துடன் சுமார் 10 மின்னூல்களின் (1843-1852) விபரங்களும் தெரியவில்லை. கோபி 04:28, 23 ஆகஸ்ட் 2008 (MDT)

எல்லா நூற்களும் தடுக்கப்பட்டது பற்றித்தெரியாது. கடைச்யாக நான் தரவேற்றிய நூல்களின் அணுக்கம் தடுக்கப்பட்டிருந்தது. நான் அணுக்க அனுமதி அமைப்புக்களை மாற்றினேன். அதன்பின்னும் பிரச்சினை தொடர்ந்தது. இப்போது தரவிறக்கும்படியாக இருக்கிறது. என்ன மாற்றம் இப்போது செய்யப்பட்டது என்று சொன்னால் பயன்படும்.
நூற்களைத்தரவேற்றிய பின் நூலகம் தளம் அடிக்கடி செயலிழந்தவண்ணமிருந்த்தாஅல் உடனடியாக பட்டியலை இற்றைப்படுத்த முடியவில்லை. தற்போது தகவல்கள் சேர்க்கபப்ட்டுள்ளன.

--மு.மயூரன் 13:10, 23 ஆகஸ்ட் 2008 (MDT)

தடுக்கப்பட்டிருந்த அனுமதியை வினோத் மீளமைத்துள்ளார். அனுமதிகளில் மாற்றங்கள் செய்த பின்னர் அவற்றைச் சரிபார்க்காவிடின் மின்னூல்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் அவதானத்திடன் செயற்பட வேண்டியுள்ளது. நன்றி. கோபி 04:45, 24 ஆகஸ்ட் 2008 (MDT)

பகுப்புக்களின் பெயர்கள்

வினோத், பகுப்புக்களின் பெயர்கள் "2002 இல் வெளியான இதழ்கள், 2002 இல் வெளியான நூல்கள், 2002 இல் வெளியான பத்திரிகைகள், 2002 இல் வெளியான பிரசுரங்கள்" என்று வருவது போல வார்ப்புருக்களை மாற்றி விடுங்கள். அப்பகுப்புக்களை உருவாக்கத் தானியங்கி பயன்படுத்த வேண்டாம். 2002 இல் வெளியான இதழ்களின் பகுப்பு "2002", "ஆண்டு வாரியாக இதழ்கள்" ஆகிய இரு பகுப்புக்களின் கீழ் வர வேண்டும். தானியங்கிகளை இயக்க முதல் சிறு தகவலேனும் தரக் கோரியமையை மறந்து விட்டீர்கள் போலும். கோபி 02:22, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

பதிவேற்றப்படாத மின்னூல்கள்

பின்வரும் 14 மின்னூல்கள் பதிவேற்றப்படாமல் உள்ளன. 1716, 1717, 1768, 1769, 1770, 1771, 1772, 1773, 1859, 1860, 1861, 1862, 1863, 1864. Gopi 07:15, 16 செப்டெம்பர் 2008 (UTC)

1768, 1769, 1770, 1771, 1772, 1773 ஆகிய 6 பிரதிகளும் சில தவறுகள் காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன. அதன் மூலப்பிரதிகளும் என்னிடம் தற்போது இல்லை. ஆயினும் விரைவில் அவற்றைப் பெற்று மின்வருடி பதிவேற்றம் செய்து விடுகின்றேன். மற்றைய விடயங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்துவிடுகின்றேன். Shaseevan 05:11, 17 செப்டெம்பர் 2008 (UTC)

ஆங்கில இடைமுகப்பு

வினோத், ஆங்கில இடைமுகப்பில் பார்க்கும்போது கைலாச புராணம் -> kailAca purANam என்பது போல தலைப்புக்கள் மாறுவதனைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். கோபி 16:12, 4 ஏப்ரல் 2009 (UTC)

தலைப்பை, டிரான்ஸ்லிடிரேட் செய்வதை தவிர்க்க இயலாது. தமிழரல்லாதோர் நூல்களை தரவிறக்க, அதைப்பற்றி அறிந்துகொள்வது அவசியம். நூல்களின் தலைப்பு, ஆசிரியர் பெயர், பதிப்பகம் இவை அனைத்து டிரான்ஸ்லிடரேட் செய்யப்படவேண்டும், வேறு வழியில்லை. பகுப்பு போன்றவற்றை மொழிப்பெயர்க்க இயலும்.
மதுரைத்திட்ட நூல்களே, தமிழுடன் டிரான்ஸ்லிடரேட் செய்யப்பட்ட பெயரை முகப்பில் கொண்டிருப்பதை அவதானிக்கவும்.
ஆங்கில இடைமுகப்பு என்று சொல்லிவிட்டு, தமிழில் தலைப்பை கொண்டிருத்தல் பொருத்தமற்றது ஆகும். வினோத் 16:37, 4 ஏப்ரல் 2009 (UTC)

//ஆங்கில இடைமுகப்பு என்று சொல்லிவிட்டு, தமிழில் தலைப்பை கொண்டிருத்தல் பொருத்தமற்றது ஆகும்.//

Early Settlements in Jaffna என்பது தமிழ் இடைமுகப்பிலும் அவ்வாறே இருக்கும் என்பது எமக்கு உறுத்தலாக இருப்பதில்லை :)

//தமிழரல்லாதோர் நூல்களை தரவிறக்க, அதைப்பற்றி அறிந்துகொள்வது அவசியம். //

இல்லை. தமிழை வாசிக்க முடியாவிட்டால் தரவிறக்கி எப்பயனும் இல்லை. Early Settlements in Jaffna என்பதனை வாசிக்க முடியாதவர் அதனைத் தரவிறக்கிப் பயனில்லை என்பதனையே போல... கோபி 16:50, 4 ஏப்ரல் 2009 (UTC)

என்னிடத்தில், எழுத்துக்கூட்டி கூட்டி வாசித்து தரவிறக்கம் செய்யப்பட்ட நிறைய ஜப்பானிய, மலையாள நூல்கள் உள்ளன :)
ஆங்கில முகப்புக்கு அதிமுக்கிய் பிரதான காரணம், எழுத்துரு. என்னுடைய கல்லூரி கணினிகளில் நூலகம் தளமே சரியாக தெரிவதில்லை. எழுத்துருக்களை நிறுவும் அதிகாரமும் எனக்கு கிடையாது. நூல்கள் தரவிறக்க வேண்டுமெனில், கண் தெரியாத காட்டில் செல்வது போலத்தான் தளத்தை உலாவ வேண்டும். இதைப்போல, எழுத்துரு நிறுவ அதிகாரம் இல்லாத இடங்களில் நூலகம் தெரிவதற்கு இது மிகவும் அவசியம்.
அதனால் தான், ஆங்கில இடைமுகப்பும் அவசியம். அதில் தலைப்பை மாற்றுதலும் அவசியம் ...
//

Early Settlements in Jaffna என்பது தமிழ் இடைமுகப்பிலும் அவ்வாறே இருக்கும் என்பது எமக்கு உறுத்தலாக இருப்பதில்லை :)//

கூறுங்கள் தமிழில் மாற்றிவிடலாம் ;)

வினோத் 17:27, 4 ஏப்ரல் 2009 (UTC)

எழுத்துருப் பிரச்சினை போன்றவற்றுக்காக transliterate செய்வது பொருத்தமில்லை. சாதாரணமாகத் தமிழை வாசிக்கக் கூடிய ஒருவருக்கு transliterate செய்யப்பட்ட பக்கம் வாசிக்கச் சிரமமளிக்கலாம். இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தும் நிலையில் transliterate செய்த பக்கங்களை வாசிப்பது மேலும் சிரமமாகி விடும்.

Early Settlements in Jaffna இனைத் தமிழில் எழுதி வாசிப்பதன் சிரமங்களைப் போல....

transliterate செய்தால் தான் வாசிக்க முடியுமென்றால் அத்தகைய பயனர்களுக்கு உதவக்கூடிய கருவிகள் இணையத்தில் இருக்கவே இருக்கின்றன.

ஆனால் பகுப்புக்களின் பெயர்கள் குறித்த இடைமுகப்பு மொழியிலேயே இருக்க ஆவன செய்ய வேண்டும். தயா சோமசுந்தரம், Daya Somasundaram என இரு பகுப்புக்கள் இல்லாமல் அவ்வவ் மொழிகளில் தெரியக் கூடியதாக ஒரே பகுப்பு இருக்க ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பகுப்புக்களை மொழிபெயர்க்க வேண்டும். அத்துடன் பதிப்பக, எழுத்தாளர் பெயர்களை ஒரேயடியாக transliterate செய்யாமல் பயன்பாட்டிலுள்ள எழுத்துக்கூட்டலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். கோபி 17:45, 4 ஏப்ரல் 2009 (UTC)

ஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [103,108] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [85,267] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [17,977]

தகவல் மூலங்கள் : நூல்கள் [11,605] இதழ்கள் [13,183] பத்திரிகைகள் [52,494] பிரசுரங்கள் [1,029] சிறப்பு மலர்கள் [5,462] நினைவு மலர்கள் [1,476]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,471] பதிப்பாளர்கள் [3,730] வெளியீட்டு ஆண்டு [177]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,046]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1596] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1328]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் [7,301] | வாசிகசாலை [58] | முன்னோர் ஆவணகம் [443] |

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [495]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [871] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | உதயன் வலைவாசல் [7,906] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:கலந்துரையாடல்/1&oldid=47026" இருந்து மீள்விக்கப்பட்டது