நூலகம்:வெளியிடப்படவில்லை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம்

நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்படும் சகல ஆவணங்களும் நூலக வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. நூலக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் ஒரு பகுதியே முழுமையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

  • விற்பனையிலுள்ள புதிய நூல்கள்
  • எழுத்தாளர் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாத நூல்கள்
  • தொடர்பு கொள்ள முடியாதுள்ள எழுத்தாளரின் நூல்கள்

போன்றவையே இவ்வாறு வெளியிடப்படாது உள்ளன. குறித்த நூல் தொடர்பில் மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தேவையென்றால் உசாத்துணைப்பக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். கல்வி, ஆய்வுத் தேவைகளுக்காக நூலின் சில பகுதிகள் தேவையெனின் அனுப்ப முடியும். தொடர்புகட்கு : noolahamfoundation@gmail.com மேலதிக தொடர்புகட்கு இங்கே சொடுக்கவும்


ஏன் வெளியிடப்படவில்லை?

நூலக நிறுவனம் தன்னுடைய முதன்மைச் செயற்பாடாக ஆவணப்படுத்தலை மேற்கொண்டுள்ள போதிலும், எண்ணிம நூலக சேவையையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஆவணங்களை முழுமையான இணையத்தில் வெளியிட முன்னர் பதிப்புரிமை, விற்பனை சார்ந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

  • பதிப்புச் சூழல் பாதிக்கபப்டாமலும் பதிப்புச் சந்தை பாதிக்கப்படாமலும் எண்ணிம நூலகத்தின் வெளியிடும் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பருவ இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
  • நூல்களைப் பொறுத்தவரை சந்தையில் விற்பனையில் உள்ள நூல்களை வெளியிடுவதில்லை என்றவாறு கொள்கையை வடிவமைத்துள்ளது. அறிவைப் பரவலாக்குவதும் அனைவரைச் சென்றடைய வைப்பதும் எமது நோக்கமாக இருந்த போதிலும் பதிப்புத்துறையின் சந்தையும் விற்பனையும் பாதிக்கப்படாமல் எம்முடைய கொள்கையை வடிவமைக்க வேண்டியிருந்தது. பதிப்புத்துறையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரும் கடமை தனக்குள்ளதாக நூலகம் கருதுகின்றது.

அவ்வகையில்

  1. பருவ இதழ்களையும் ஏனைய வெளியீடுகளையும் அதிக கட்டுப்பாடுகள் இன்றி வெளியிடுகிறோம். இவற்றின் விற்பனையானது குறித்த சிறு காலப்பகுதியில் நிகழ்வதென்ற அடிப்படையில் இவற்றினை வெளியிடுவது பாதிப்பினை ஏற்படுத்தாது என்று கருதுகிறோம்
  2. நூல்களைப் பொறுத்தவரையில்
    • 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த நூல்களை இணையத்தில் வெளியிடுகிறோம்.
    • எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் தம் நூல்களைத் தருகையில் 2007 டிசம்பர் 31 வரை வெளியானவற்றினை இணையத்தில் வெளியிடுகிறோம். (இறுதி 5 வருடங்களுக்கு முதல் வெளிவந்தவை.)
    • எழுத்தாளர் கட்டாயப்படுத்தினால் மட்டுமே 2008 இலும் அதற்குப் பின்னரும் வெளியான நூல்களை இணையத்தில் வெளியிடுகிறோம்.

மேலும், நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் எவையேனும் மீள்பதிப்புச் செய்யப்பட இருப்பின் அந்தத் தகவலை நூலக நிறுவனத்துக்குத் தெரியப்படுத்துவதனூடாக அந்த ஆவணங்களுக்கான அணுக்கத்தினை இடைநிறுத்தலாம்.

நன்றி


மொத்த ஆவணங்கள் : 151,803 | மொத்த பக்கங்கள் : 5,549,960

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,15,973] பல்லூடக ஆவணங்கள் [35,194] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,879] ஆளுமைகள் [3,354] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [18,789] இதழ்கள் [16,839] பத்திரிகைகள் [67,525] பிரசுரங்கள் [1,329] சிறப்பு மலர்கள் [6,907] நினைவு மலர்கள் [2,324] அறிக்கைகள் [2,360]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,414] பதிப்பாளர்கள் [6,754] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1399] | பெண்கள் ஆவணகம் [1706]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3134]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1667] | அம்பாறை ஆவணகம் [570]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [71] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,856] | பழங்குடியினர் ஆவணகம் [274] | உதயன் பத்திரிகை நூலகம் [2,574] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,383] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க