பயனர் பேச்சு:மு.மயூரன்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:03, 16 மார்ச் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (தகவல்கள் இற்றைப்படுத்தல்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம்

html, pdf

உப தலைப்புக்கள் கொடுப்பது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களைத் தொகுக்கும் போது அழகாக இருக்கும். ஒரேயொரு இணைப்புக்கு உபதலைப்புப் பொருத்தமாயில்லை. அத்துடன் வெளியிணைப்புக்களுக்காகவும் இன்னொரு தலைப்புத் தேவைப்படும். பக்கம் எளிமையாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கான தொடுப்பு, பின்னர் சிறு குறிப்பு, கடைசியாக வெளியிணைப்புக்கள் என மூன்று பிரிவாக ஒவ்வொரு கட்டுரையும் அமைக்கப்படுவது பொருத்தம். அவ்வாறிருக்கையில் html, pdf ஆகியவற்றுக்குத் தனித்தனி உபதலைப்பிடுவது அழகாயிராது. நான் ஆரம்பத்தில் செய்ததுபோல தொடுப்பிலேயே html, pdf என்பவற்றைக் குறித்துக் கொண்டால் போதுமென நினைக்கிறேன். --கோபி 22:02, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

நூல்களுக்கான முகப்புப் படம்

சில நூல்களுக்கு முகப்புப் படங்கள் கிடைக்காது. அத்தகைய நூல்களுக்குப் பயன்படுத்த ஒரு பொதுவான படம் தேவை. Sample.jpg என்ற பெயரில் பொருத்தமான படமொன்றைப் பதிவேற்றுவது பயனுள்ளதாயிருக்கும். --கோபி 01:32, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

செய்துவிடுகிறேன் --மு.மயூரன் 01:33, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

நன்றி. அவ்வாறே நூலக லோகோவையும் சரிசெய்துவிடு :-) கோபி 04:39, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

பொதுவான உரையாடல்கள்

பொதுவான கலந்துரையாடல்களை நூலகம்:கலந்துரையாடல் என்ற பக்கத்தில் மேற்கொள்வது --பொருத்தமாயிருக்குமல்லவா? பங்களிக்கும் ஏனையோரும் பின்னர் வாசிக்க இலகுவாயிருக்கும்... கோபி 01:40, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

namespace

நூலகம் தொடர்பான பக்கங்களை உருவாக்கும்போது நூலகம் பெயர் வெளியில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவை பொதுவான பக்கங்களில் ஒன்றாகவே அடையாளம் காணப்படும். கோபி 03:42, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

கலந்துரையாடல் பொதுவான கலந்துரையாடல்களுக்குத் தானே? இது மீடியாவிக்கிப் பரிச்சயம் தொடர்பானது மட்டும்தான்  :-) பார்க்க: [1].
முதன்மை, பயனர், படிமம், பகுப்பு, வார்ப்புரு, உதவி, மீடியாவிக்கி, நூலகம் (site name) ஆகிய பெயர் வெளிகள் உள்ளன. கோபி 03:51, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

பார்க்க

கோபி 04:44, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

நூல் வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பகுப்புக்கள் தாமாக இலடப்படும். மேலதிக வகைகளை இட்டுக் கொண்டால் போதுமானது. கோபி 05:46, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

வார்ப்புருவைச் சரிசெய்தபின் பக்கங்களை உருவாக்குவது நல்லது. எப்படியென்று உடனடியாகத் தெரியவில்லை. பிறவிக்கிகளைப் பார்க்க வேண்டும். --கோபி 06:03, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

பார்க்க

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்

அட்டைப்படப் பெயர்கள்

மயூரன், நூல்களுக்கான அட்டைப்படங்களுக்கு குறித்த நுஉலின் இலக்கத்தை வழங்குவது பொருத்தமாயிருக்கும். --கோபி 05:35, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

இனி கவனிக்கிறேன் --மு.மயூரன் 05:37, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

புதிய நூல் வார்ப்புரு

மயூரன், பகுப்புக்களைத் தானாக இடுவதற்கு இதே வார்ப்புருவைத் தான் முதலில் பயன்படுத்தினேன். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆண்டுகளை இதனால் கையாள முடியாது. மேலும் மின்னூற் தொடுப்புக்கள் இடதுபக்கம் அமைவது நல்லது ஏனெனில் மின்னூல் வாசிக்க வரும் ஒருவருக்கு முதலில் தெரிவதாகவும் இலகுவில் புலப்படுவதாகவும் பக்கம் அமைய வேண்டும். முதற்பக்க மாற்றம் நன்று. கோபி 20:48, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வரும்போது "ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்" என்று குறித்துவிட்டு நாம் மேலதிகமாக ஒவ்வொரு ஆசிரியர் பெயரிலும் பகுப்பிட வேண்டும். இடது பக்கத்தில் வரவேண்டியதையும் தன்னியக்கமாக்கி விடலாம். (வார்ப்புருவே செய்யும்படி) என்னைப்பொறுத்தவரையில் நூலை சேர்ப்பது முடியுமானவரை இலகுவாக்கப்பட வேண்டும். அவ்வளவே. --மு.மயூரன் 23:08, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

தன்னியக்கமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. மொத்தமாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள் 700+ மட்டும்தான். பகுப்புக்கள் சரியாக அமைவதும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதுமே முக்கிமானது. மீடியாவிக்கிப் பரிச்சயம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைத் தன்னியக்கமாக சேர்க்க முடியும். வார்ப்புரு மாற்றப்பட்டால் பக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். இல்லையேல் வருபவர்களுக்குப் பக்கங்கள் விக்கிக் குறியீடுகளாகவே தெரியும். கோபி 23:22, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

//ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வரும்போது "ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்" என்று குறித்துவிட்டு நாம் மேலதிகமாக ஒவ்வொரு ஆசிரியர் பெயரிலும் பகுப்பிட வேண்டும்.//

-)

இவ்வாறு விதம்விதமாகப் பகுப்பிடாமல் இறுதியிலேயே பகுப்புக்களைக் குறித்துக் கொள்ளலாம். ஓரிரு சொற்களை மேலதிகமாக எழுதுவது அவ்வளவு சிரமென்றில்லை. இல்லை தன்னியக்கமாகத் தான் செய்ய வேண்டுமென்றால் அதற்கான மீடியாவிக்கி அறிவே தேவை. இந்த வார்ப்புருவை விடவும் முக்கியமானது வாசிக்க என்ற பகுதிக்கு அடுத்ததாக அமைக்க வேண்டிய அறிமுகம், வெளி இணைப்புக்கள் போன்றவை. அறிமுகமாக செல்வராஜாவின் நூல்தேட்ட அறிமுகத்தைப் பயன்படுத்தலாம். குறித்த நூல் குறித்த அறிமுகக் கட்டுரைகள் இணையத்தில் இருப்பின் வெளி இணைப்புக்கள் வழங்கலாம். இணைய நூலகமொன்றின் சாத்தியங்களைப் பயன்படுத்துவதே முக்கியமானது. கோபி 23:28, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

அப்படியாக இருந்தால் நூல்களை நானும் நீங்களும் மட்டுமே உள்ளிட்டுக்கொண்டிருக்க வேண்டி வரும். வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு அதனை இலகுபடுத்தவேண்டிய தேவை இருப்பதாய் உணர்ந்தேன். இல்லாவிட்டால் மற்ற்வர்கள் பங்களிக்க வர மாட்டார்கள். பட்டியல் முழுமைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகம் போன்றவற்றை பிறகும் இட்டுக்கொள்ளலாம். பட்டியல் முழுமைப்படுத்தப்படுவதே அவசியமானது. இதையும் பகிர்ந்து செய்ய முடியாமல் wiki syntax என்ற அதிகாரம் தடுத்துக்கொண்டிருக்கிறது. --மு.மயூரன் 23:46, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

நீங்கள் சுட்டிக் காடுவது சரியானது; நான் மறுக்கவில்லை. ஆனால் சரியான விக்கியறிவு இன்றி இதனைச் செய்வது கூட தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுதான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், பதிப்பகங்கள், பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை என்ன செய்வது? நான் என்ன மாற்றம் செய்தாலும் பக்க வரலாற்றில் உள்ளது. மீளமைத்துப் பார்க்கலாம். ஒரு வார்ப்புருவில் மாற்றம் செய்தால் அது பயன்படும் அனைத்துப் பக்கங்களிலும் மாற்றஞ் செய்யப்படல் வேண்டும். ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைப்பதால் பயனில்லை. விக்கி இப்பொழுது நூலக முகப்பாக உள்ளதால், வார்ப்புருவில் மாற்றஞ் செய்தால் விரைவாக அனைத்துப் பக்கங்களும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அதற்கான ஆளணி இன்மையை உணர்ந்தே வார்ப்புருவை முன்னிலையாக்கினேன். மின்னூல் இணைப்பு தனியாகக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைத் தவிர நீங்கள் செய்த மாற்றத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் மாற்றம் பொருத்தமாகச் செய்யப்படல் வேண்டும் என்பதை ம்ட்டுமே சுட்டிக் காட்டினேன். நன்றி. :-) கோபி 04:21, 1 செப்டெம்பர் 2007 (MDT)

மயூ, நீங்கள் உருவாக்கிய வார்ப்புருவில் இருக்கும் அதே பிழையுடன் தான் முன்னர் நான் வார்ப்புரு உருவாக்கினேன். அதனை உடன் சுட்டிக் காட்டியது நீங்கள்தான். //கோபி, ஒன்றுக்கு மேற்பட்ட நூலாசிரியர்களைக் கையாளக்கூடியதாக, நூல் வார்ப்புரு இல்லை என்று நினைக்கிறேன். அது சரிப்படுத்தப்படவேண்டும், நூலாசிரியர்களை ஒன்றுக்குக்கு கீழ் ஒன்றாக பட்டியலிடத்தக்கதாக வார்ப்புரு மாற்றப்பட வேண்டும். --மு.மயூரன் 05:51, 30 ஆகஸ்ட் 2007 (MDT) // பார்க்க பயனர் பேச்சு:கோபி அதே பிழையுடன் மீண்டும் வார்ப்புருவைப் பயன்படுத்துவதால் பயனில்லை. ஆதால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வரை நூல் விபர உள்ளிடலைத் தாமதப்படுத்தலாம். அல்லது எளிமையாக ஆரம்பத்தில் பயன்படுத்திய வார்ப்புருவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பட்டியல் முழுமைப்படுத்தப்படுவது முக்கியமென்பதை நான் மறுக்கவில்லை. நன்றி. கோபி 04:29, 1 செப்டெம்பர் 2007 (MDT)

சிவப்பு இணைப்புக்களை நீக்குதல்

மயூரன், படிமங்களை சசீவனுக்கு அனுப்பியிருக்கிறேன். இப்பொழுது அவசரமாக நீங்கள் செய்ய வேண்டியது 700 - 1000 இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்குவதாகும். சிவப்பு இணைப்புக்கள் இல்லாதிருப்பது நூலகம் தளத்துக்கு நல்லது. நன்றி. கோபி 17:47, 1 பெப்ரவரி 2008 (MST)


கோபி, 700- 1000 என்பது தவறு. அது 601- 1000 என வரவேண்டும். கோபி 701-1020 வரையான படிமங்களை விரைவாக அனுப்பி வைக்கவும். மயூரன், நானும் நீங்களும் பேசிக்கொண்டதற்கு இணங்க, நான் 500- 1000 இற்கிடையிலான பிரதிகளுக்கு கட்டுரை போட்டுவிட்டேன். நீங்கள் தான் இதழ்களுக்கு போட்டு முடிக்க வேண்டும். அதை தயவு செய்து இயலுமானவரை விரைவாகச் செய்யவும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். நன்றி. Shaseevan

சசீவன், கோபி, ஐந்து நாட்களுக்கு எனக்கு விடுமுறை தேவைப்படுகிறது. எதிர்வரும் 6ம் திகதியிலிருந்து வெகுவேகமாக கட்டுரைகளை போட்டு முடித்து விடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். --மு.மயூரன் 23:10, 1 பெப்ரவரி 2008 (MST)

மயூரன், இனி, கட்டுரை போடும் போது ஒரே மாதிரியான சஞ்சிகைகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால், உதாரணத்துக்கு அவற்றில் ஒன்றுக்கு மட்டும் உடனடியாகப் போட்டுவிடவும். மிகுதியைப் பிறகு பார்க்கலாம். உதாரணமாக ஒரே இடத்தில பல விபவிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு மட்டும் உடனடியாகப் போட்டுவிடவும். சிரித்திரன், யாத்ரா வும் அவ்வாறே காணப்படுகின்றன. அதேபோல எல்லாவற்றிற்கும் செய்துவிடவும். அது இன்னுமொருவர் கட்டுரை போடுவதற்கு உதவியாக இருக்கும். 601-1000 இற்கு இடையில் உடனடியாகச் செய்துவிடவும் --Shaseevan


மயூரன், நான் மேலே கூறியதைமீண்டும் பார்க்கவும். ஏனெனில் சில புதியவர்கள் நூலகத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களால் உடனடியாக எல்லாவற்றையும் அறிந்து செய்ய முடியாது. ஆகவே நீங்கள் உதாரணக் கட்டுரை போடுவதே நல்லது என நினைக்கின்றேன். அத்துடன் நீங்கள் இனிமேல் 801-900 வரையான சஞ்சிகைகளுக்கான கட்டுரையை போடவும். மற்றையவர்கள் சிலவிதமான ஒழுங்குகளுக்குள் வேலைகள் செய்வதால் அதுவே நல்லது என நினைக்கின்றேன். --Shaseevan

தகவல்கள் இற்றைப்படுத்தல்

2007 இல் தொடங்கப்பட்ட மின்னூலாக்கற் செயற்றிட்டங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிவடைந்துவரும் நிலையில் உங்களூடாக ஒப்படைக்கப்பட்ட இரு மின்வருடிகளைப் பயன்படுத்தியமை தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களையும் நீங்கள் தரவில்லை.

அவற்றில் ஒன்றைப் பெற்றுக் கொண்ட பிரசன்னா 2007 யூலை வரை இலங்கையில் அரசியல் கட்சி முறைமை, இஸ்லாத்தின் தோற்றம், கலாச்சாரம் எதிர்கலாச்சாரம், புதிய கலாச்சாரம், மறப்பதற்கு அழைப்பு, மரபும் மாக்சியவாதியும், அசையும் படிமங்கள், யாழ்ப்பாணம்: சமூகம் பண்பாடு, கருத்துநிலை, ஆஅல்வினைத் தொழிலாளர், திருக்கோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை, சிறகுகள் 2. சிறகுகள் 4, யாத்ரா 7, யாத்ரா 12 ஆகிய 13 மின்னூல்களைத் தயாரித்திருந்தார். அவற்றை நானே சரிபார்த்திருந்தேன். நூல்களை மட்டுமே நீங்கள் வழங்கினீர்கள்.

2007 டிசம்பரில் நான் மீண்டும் இலங்கை வந்திருந்தபோது பிரசன்னாவை ஊக்கப்படுத்தி மேலும் 19 மின்னூல்களை பெற்று சசீவனிடம் ஒப்படைத்தேன். ஆயினும் அவை சரிபார்க்கப்படவில்லை. அவற்றைச் சரிபார்த்து நூலகத்தில் இணைக்கக்கூடியவற்றைத் தெரிவுசெய்யும் மேற்பார்வையை உங்களால் செய்ய முடியுமா என்பதைத் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.

அத்துடன் மயூரன் உங்களது பொறுப்பில் திருகோணமலை சென்ற மின்வருடி தொடர்பான தகவல்களையும் தெரியப்படுத்துங்கள். இதுவரை நடைபெற்று முடிந்த மின்னூலாக்கம் முழுவதும் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் பல தகவல்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

மயூரன், மின்னூலாக்கத்தைச் சரிபார்ப்பதைவிடுத்து வேறுபணிகளில் ஈடுபட விரும்பினால் அவ்வேலையை சசீவனிடமே ஒப்படைக்கலாம். அவ்வாறாயின் சசீவன் இப்பொழுது எஞ்சியுள்ள 9 மின்வருடிகளுக்கான வேலைகளுடன் பத்தாவதாக பிரசன்னாவிடம் கொடுக்கப்பட்ட மின்வருடிக்கான மின்னூலாக்கத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். இது தொடர்பில் உடனடியாக இருவரும் தீர்மானியுங்கள்.

தன்னார்வலர்கள் தமக்குப் பொருத்தமான வேலைகளைப் பொறுப்பெடுப்பது வினைத்திறனுடைய பங்களித்தலைச் சாத்தியமாக்கும். நூலகத் திட்டந் தொடர்பில் 2008 இல் உங்களால் எத்தகைய வேலைகளைப் பொறுப்பெடுக்க முடியும் என்பதை அறியத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

குமரன் செ. கணேசலிங்கனின் நூல்களை ஆவணப்படுத்த அனுமதித்தமை போன்றவை தொடர்பிலும் முறையான அனுமதி கிடைத்தால் அவற்றையும் முன்னெடுக்க முடியும். இலங்கையில் இருப்பதாலும் தொடர்புகள் இருப்பதாலும் நூலகந் தொடர்பில் அனுமதிகளைப் பெறும் பொறுப்பையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை அறியத்தாருங்கள்.

எனது இணைய இணைப்பு வேலைசெய்வதாலும் சில துப்பரவுப் பணிகள் செய்ய வேண்டியிருப்பதாலும் எனது பயனர் கணக்கிற்கு bureaucrat, sysop ஆகிய அணுக்கங்களை மீண்டும் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 20:55, 4 மார்ச் 2008 (MST)


கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:09, 5 மார்ச் 2008 (MST)

கடவுச்சொல்

நூலக வழங்கிக்கான புதிய கடவுச்சொல்லை அஞ்சல் செய்திருக்கிறேன். (சசீவனுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளேன்) காலத்துக்குக்காலம் தரவுத்தளத்தை backup செய்து கொள்ள வேண்டியுள்ளது. கோபி 03:03, 16 மார்ச் 2008 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:மு.மயூரன்&oldid=5795" இருந்து மீள்விக்கப்பட்டது