பகுப்பு:லண்டன் தமிழர் தகவல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:26, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

லண்டன் தமிழர் தகவல் இதழானது லண்டனைக் களமாகக் கொண்டு 2003 ஆம் தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதன் பதிப்பாசிரியராக நா.சிவானந்தசோதி அவர்கள் காணப்படுகிறார். இதழாசிரியராக அரவிந்தன் அவர்கள் காணப்படுகிறார். இதனை லண்டன் திருமுருகன் அறிவகம் வெளியீடு செய்துள்ளது. இது ஆரம்பத்தில் மாதாந்த இதழாகவும், பின்னைய நாட்களில் காலாண்டு இதழாகவும் வெளிவந்து இலவச விநியோகம் செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தும் தாய் நாட்டிலும் சிதறுண்டு போன தமிழினத்தினை ஏதொ ஒருவகையில் அதாவது செய்தியாக, இலக்கியமாக, அரசியலாக, சமூகப்பிரச்சினையாக என பலதரப்பட்ட எழுத்து முயற்சிகளால் இணைக்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக 15 வருடங்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு, பதிப்பாசிரியரின் மறைவின் பின்னர் (2019) நிறுத்தம் கண்டுள்ளது. இது 180 இதழ்களைக் கண்டுள்ளதுடன் சிறுகதைச் சிறப்பிதழ் முதலான சிறப்பிதழ்களையும் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இவ்விதழானது தமிழர் நிகழ்வுகள், கலை, இலக்கியம், அரசியல்,கவிதை, கட்டுரை. சிறுகதை , நிகழ்வுகளில் படங்கள் தாங்கி தமிழ் மக்களுக்கு தகவல் வழங்கும் இதழாக வெளிவந்துள்ளது.

"லண்டன் தமிழர் தகவல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 121 பக்கங்களில் பின்வரும் 121 பக்கங்களும் உள்ளன.