பகுப்பு:மல்லிகை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் வரலாற்றில் மல்லிகை எனும் சிற்றிதழ் முக்கியமானது. 1966 ஓகஸ்ட் மாதம் முதலாக, 47 ஆண்டுகள் வெளிவந்து, இலக்கியச் சாதனை நிகழ்த்திய இந்த மாதாந்த இதழின் ஆசிரியர், எழுத்தாளர் டொமினிக் ஜீவா. ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இவ் இதழ், பின்னர் கொழும்பிலிருந்து வெளியாகியது.

சுதந்திர இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பல்வேறு படைப்புகளூடாக வெளிப்படுத்தியதுடன், இலங்கைத் தமிழ் இலக்கியத்தைத் தமிழக எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் மல்லிகை மேற்கொண்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பலரும் மல்லிகையில் எழுதினர். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் மல்லிகையில் எழுதியுள்ளனர்.

இலங்கையின் முற்போக்கு இலக்கிய முக்கியஸ்தர்கள் மல்லிகைக்கூடாகவே நன்கறியப்பட்டனர். அவர்களின் எழுத்துக்களை அறிவதற்கு மல்லிகை பயன்படும். இன்னும், கருத்துநிலை ரீதியில் மாறுபட்ட எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் முதலியோரின் எழுத்துக்களையும் மல்லிகையில் காணலாம். பிற்காலத்தில் வரலாற்றில் நன்கறியப்படும் பலரும் மல்லிகையூடாகவே அறிமுகம் பெற்றனர். மல்லிகையின் பெரும்பாலான இதழ்களின் அட்டைப்படங்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள் முதலியோரில் ஒருவரின் ஒளிப்படத்தைத் தாங்கியிருந்ததுடன், அவர் பற்றிய அறிமுகம் கட்டுரையாகவும் இதழினுள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியச் சர்ச்சைகள், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் முதலிய பலவும் மல்லிகையில் வெளியாகின. மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் படைப்புகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியாகின. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் படைப்புகள் மல்லிகையில் வெளியாகின. மல்லிகையில் வெளிவந்த இவர்களது படைப்புகள் பலவும் பின்னர் மல்லிகைப் பந்தல் வெளீயீடாக வெளிவந்தன. ஒவ்வொரு வருடமும் தைமாத இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.

தமிழ் இலக்கியம் என்ற பெருவெளியில், இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தக்கவைத்ததிலும், விரிவாக்கி வளர்த்ததிலும், நவீன இலக்கியத்தைச் சனநாயக மயப்படுத்தியதிலும், பிரதேச இலக்கியத்தளத்திற்கு முதன்மையளித்ததிலும் தமிழ் உலகில் மிக நீண்டகாலம் வெளிவந்து பணியாற்றிய ஒரே இதழ் என்றவகையிலும் மல்லிகைக்கு முக்கிய பங்குண்டு. 04.07.2001 இல், இலங்கைப் பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில், பாராட்டுடன் கூடிய பதிவைப் பெற்றது.

"மல்லிகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 389 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மல்லிகை&oldid=256236" இருந்து மீள்விக்கப்பட்டது