பகுப்பு:தென்றல்

From நூலகம்

'தென்றல்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற பல்சுவை காலாண்டு இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.க.கிருபாகரன்.

இதழின் பன்முக உள்ளடக்கத்தில் ஈழத்து இலக்கிய மற்றும் இசைத் துறைக்கு பெரும் பங்காற்றியவர்களை தென்றலின் தேடல் எனும் பகுதியூடாக உலகறிய செய்கின்றது. இவற்றுடன் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், அழகுக்கலை குறிப்புக்கள், குடும்ப மருத்துவ தொடர், நிகழ்வுகளின் பதிவுகள், நூல் அறிமுகம் என்பவற்றை உள்ளடக்கத்தில் கொண்டுள்ளது. இவற்றுடன் தரம் 5புலமைப் பரிசில் மாணவர்களிற்கான வழிகாட்டல் மாதிரி வினாத் தொகுப்பும் இதழின் உள்ளடக்கத்தை கனதியாக்குகின்றது.

தொடர்புகளிற்கு:- 44/1,பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு. T.P:-0094-77-6983597,0094-65-2227542 E-mail:-kirupabatticaloa@yahoo.com

Pages in category "தென்றல்"

The following 51 pages are in this category, out of 51 total.