உதவி:அண்மைய மாற்றங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அண்மைய மாற்றங்கள் என்னும் சிறப்புப்பக்கம் இத்தளத்தில் நடக்கும் சமீபத்திய மாற்றங்களை பட்டியலிடுகிறது. இந்த பக்கத்தில் அண்மையில் நடந்த பக்க தொகுப்புகள், பதிவேற்றங்கள், புதுப்பயனர் உருவாக்க பதிகைகள், போன்றவற்றைக் காணலாம். இதன் மூலம் தேவையற்ற தொகுப்புக்களைக் கண்காணித்து அவற்றை அகற்ற முடியும்

பக்க வடிவமைப்பு

இந்த அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பக்கத்தின் பெயர், தேதி எத்தனை மணிக்கு மாற்றங்கள் நிகழந்தன, யாரால் நிகழ்த்தப்பட்டது போன்ற அனனத்துத் தகவல்களும் கீழ்வரும் அட்டவணைக்கு ஒத்த வடிவமைப்பில் இடப்பட்டிருக்கும்.

(வேறுபாடு) (வரலாறு) . . பக்கப்பெயர்‎; நேரம் . . (மாற்றம் அளவு) . . பயனர் பெயர் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (சுருக்கம்)

உதாரணம்,

(வேறுபாடு) (வரலாறு) . . உதவி:விக்கி குறியீடு‎; 09:09 . . (+1,187) . . Vinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (உரை திருத்தம்)

புதிய பக்கங்களுக்கு பக்கபப்பெயரின் முன்னால் பு என்ற குறியும் , சிறு தொகுப்புகளுக்கு சி யும், தானியங்கி தொகுப்புக்களுக்கு தாவும் தோன்றும்

தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பின் கூட்டல் குறியும் நீக்கப்பட்டிருப்பின் கழித்தல் குறியும் தென்படும். குறிப்பிட்ட எண், எத்தனை பைட்டுகளுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் குறிப்பிடும். மேலும் இறுதியில் தொகுப்புச்சுருக்கமும் எனக் காணப்படும்.

இயல்பிருப்பாக, தளத்தில் நிகழ்ந்த கடைசி 50 மாற்றங்கள்தான் இடப்பட்டிருக்கும், இதற்கு மேலான மாற்றங்களை காண 50 | 100 | 250 |500 என வரிசையில் தேவைக்கேற்றாற்போல் எத்தனை மாற்றங்களை காணவேண்டுமோ அதற்கேற்ற எண்ணை சொடுக்கவும்.

வேறுபாடுகளை காணுதல்

மாற்றம் நடைபெற்ற பக்கத்திற்கு இடது புற (வேறுபாடு) (வரலாறு) என இரு இணைப்புகளை காணலாம். வேறுபாடு என்ற இணைப்பை சொடுக்கினால் முந்தைய பதிப்பிற்கும் தற்போதைய பதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் ஒரு பக்கத்தைக்காட்டும். வரலாறு என்பதை சொடுக்கினால், குறிப்பிட்ட பக்கத்தின் பக்க வரலாற்றுக்கு இட்டுச்செல்லும்

பயனர் இணைப்புகள்

பக்கத்தின் பெயருக்கு வலது புறம், மாற்றத்தை செய்த பயனர், அவருடைய பயனர் பக்கத்திற்கான இணைப்பு, அவருடைய பேச்சுப்பக்கத்திற்கான இணைப்பு, மற்றும் அவருடைய பங்களிப்புகளுக்கான இணைப்பு ஆகியவை இருக்கும். இவற்றை சொடுக்குவதன் மூலம் வேண்டிய பக்கத்திற்கு செல்லலாம்

மாற்றங்களை மறைத்தல்/காட்டுதல்

சிறிய தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | புகுபதிகை செய்த பயனர்களை மறை | மறை கவனிக்கப்பட்ட தொகுப்புக்கள் | என் தொகுப்புகளை மறை

மேலே இருப்பவையே இயல்பிருப்பாகும். இயல்பான தேர்வுகளாக இவையே இருக்கும்.

மறை அல்லது காட்டு என்பதை சொடுக்குவதன் மேலும் தகுந்த மாற்றங்களை இந்த பக்கத்தில் காணவோ மறையவோ செய்ய முடியும்

சிறிய தொகுப்புகள் - தொகுத்தலில் இது ஒரு சிறு தொகுப்பு என தெரிவு செய்யப்பட்ட அனைத்தும் சிறிய தொகுப்புகள் ஆகும். தானியங்கிகள் - கணினி தானியங்கி நிரல்கள் செய்யும் தன்னியக்க தொகுப்புகள் இவை கவனிக்கப்பட்ட தொகுப்புகள் - கவனிக்கப்படும் பக்கங்களில் நிகழும் தொகுப்புகள் என் தொகுப்புகள் - புகுபதிகை செய்த பயனர் செய்த தொகுப்புகள்

பெயர்வெளி

இயல்பாக அனைத்து பெயர்வெளிகளில் நடக்கும் மாற்றங்களும் பட்டியலிடப்படும். ஒரு குறிப்பிட்ட பெயர்வெளியில் நடைபெற்ற மாற்றங்கள் மட்டும் வேண்டின் அதற்கேற்றாற் போல் தெரிவுப்பெட்டியில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்க.