உதவி:பக்க கவனிப்பு
ஒரு பக்கத்தில் நிகழும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்தலே பக்க கவனிப்பு ஆகும். அண்மைய மாற்றங்கள் அனைத்து மாற்றங்களையும் காட்டுவதால் இதன் மூலம் குறிப்பிட்ட பக்கங்களில் நிகழும் மாற்றங்களை மட்டும் கண்காணித்தல் கடினமாகிறது, இந்நிலையிலேயே பக்க கவனிப்பு உதவுகிறது.
பக்கங்களை கவனித்தல்
ஒரு குறிப்பிட்ட பக்கத்தை கவனிக்க வேண்டுமெனில், பக்கத்தின் அடியில் கவனி என்னும் இணைப்பை சொடுக்குவதன் மூலம் அப்பக்கத்தை கவனிக்கலாம். உடனே அப்பக்கம் உங்கள் கவனிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். இவ்வாறாக விருப்பட்ட எத்தனை பக்கங்களை வேண்டுமென்றாலும் கவனிக்கலாம். தங்கள் கவனிப்பு பட்டியலை உள்ள கட்டுரைகளில் நடந்த மாற்றங்களைக் காண வேண்டின் பக்கத்தின் அடியில் என் கவனிப்புப் பட்டியல் என்பதை சொடுக்கவும்.
ஒரு கட்டுரையை இயற்றும் போதோ அல்லது தொகுக்கும்போதோ அந்த கட்டுரையை கவனிக்க விரும்பினால் இக்கட்டுரையை கவனிக்கவும் என தெரிவுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்
பக்க கவனிப்பை நீக்குதல்
ஒரு பக்கத்தை உங்கள் கவனிப்பு பட்டியலில் இருந்து நீக்க, நீங்கள் எந்த பக்கத்தை விலக்க விரும்புகிறீர்களோ அந்த பக்கத்திற்கு சென்று, பக்கத்தின் அடியில் கவனிப்பு நீக்கு என்பதை சொடுக்கினால், அந்த பக்கம் உங்கள் கவனிப்பில் இருந்து விலக்கப்படும்.
அண்மைய மாற்றங்கள்
அண்மைய மாற்றங்கள் பகுதியில் நீங்கள் கவனிக்கும் பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் தோன்றும்.