ஆளுமை:சடாட்சரன், மு

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:31, 13 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சடாட்சரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சடாட்சரன்
தந்தை முருகேசு
தாய் கனகம்மா
பிறப்பு 1940
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சரன், மு (1940) கல்முனையைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை முருகேசு; தாய் கனகம்மா. கர“டுழன ஆரம்பக் கல்வியை விவேகானந்தா வித்தியாலயத்திலும் கல்முனை இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார். 1958ஆம் ஆண்டு கல்ஈனை பகுத்தறிவு மன்றத்தில் இணைந்து செயற்பட்டார். கவிதை, மேடைபேச்சு ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

1959ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். இவரது முதல் கவிதை 1959ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. கலாசாலை பத்திரிகையான பாமலர் மாலைக்கு ஆசிரியராகவும் இருந்தார். இன்பவாழ்வு, வளர்த்த பாசம் போன்ற சமூக சீர்த்திருத்த நாடகங்களை கல்முனையில் 1958ஆம் ஆண்டு எழுதித் தயாரித்து முக்கிய பாத்திரங்களில் நடித்து மேடையேற்றினார்.

மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் எழுதியுள்ள இவரின் கவிதைகள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சிந்தாமணி, தினக்குரல், சரிநிகர், ஆதவன் ஆகிய நாளிதழ்களிலும், மல்லிகை, கலைமகள், களம், பாடுமீன், வியூகம், யாத்திரா, கவிஞன், சுடர், செங்கதிர், நோக்கு போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 1967ஆம் ஆண்டு பாடுமீன் என்னும் இலக்கிய சஞ்சிகையை இரண்டு இதழ்களை வெளிவர நீலாவணன், சண்முகம் சிவலிங்கம் ஆகியோடு இணைந்து செயற்பட்டார்.

மேட்டுநிலம் என்னும் பெயரில் 2009ஆம் ஆண்டு இவரின் சிறுகதை வெளிவந்துள்ளது. இந்நூல் 2010ஆம் ஆண்டு கிழக்குமாகாணக் கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் இலக்கிய நூலுக்கான பரிசும் கிடைத்தது.

விருதுகள்

கலைச்செல்வர்

கலாபூஷணம்

கலைக்குரிசில்


வளங்கள்

  • நூலக எண்: 13147 பக்கங்கள் 3-4
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சடாட்சரன்,_மு&oldid=396505" இருந்து மீள்விக்கப்பட்டது