ஆளுமை:சுபித்திரா, கிருபாகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுபித்திரா
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபித்திரா, கிருபாகரன் இளவயதிலிருந்தே நடனக்கலையை பயின்றுவருகிறார். ஆரம்பக் குருவான நடனகலாமணி ம.கைலாயப்பிள்ளை அவர்களிடமும் தொடர்ந்து யாழ்ப்பாணம் கீதாஞ்சலி ஏழு-நல்லையா, இந்திய பரத சூடாமணி இயக்குனர் அடையார் கே.லக்ஸ்மணன் அவர்களிடமும், நடனக்கலை பயின்று பரதநாட்டியத்தில் டிப்ளோமா பட்டமும் நட்டுவாங்கப் பயிற்சியும் பெற்றதுடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கலாபூஷணம் மகாவித்துவான் பிரம்மஸ்ரீமா.த.ந.வீரமணிஐயர் அவர்களிடம் நடனம் பயின்றார். இவர் இடது கை நட்டுவனாவார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடன ஆசிரியையாயகப் பணிபுரியும் இவர் இலங்கையின் வடக்கில் பிறந்தவர். பரதகலாலயா என்ற நடன நிறுவனத்தை இலக்கம் 10 வீரசிங்கம் சதுக்கம், எல்லைவீதி மட்டக்களப்பில் 1982ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் 08.05.2008ஆம் ஆண்டு நிருத்தலாவண்யா எனும் நிகழ்ச்சியை வெகுவிமர்சையாகக் கொண்டாடியதுடன் கலாலய சாகரம் எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டது. இவரின் பரதகலாலயா பல நடனக் கலைஞர்களையும், நடன ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளது. இவரிடம் நடனம் கற்ற மாணவிகள் கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ் போன்ற வெளிநாடுகளில் நடனக் கலை வகுப்புக்களை நடாத்துகின்றனர். வருடந்தோறும் பரதகலாலயம் மாணவர்கள் நடன நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடாத்தி வருகின்றனர்.

விருதுகள்

நாட்டியக்கலாமணி

ஜெயாஞ்சலி நாட்டிய கலா விருது 2004ஆம் ஆண்டு

நிருத்தியவாணி -2008ஆம் ஆண்டு


வளங்கள்

  • நூலக எண்: 6118 பக்கங்கள் 12-15

வெளி இணைப்புக்கள்